சைடு கேப்பில் அமீர் கானை தாஜா பண்ணிய லோகேஷ்.. ஆள விடுங்கன்னு 20 நிமிஷம் தலை மறைவான ரஜினிகாந்த்

அமீர்கான் அடுத்த படம் லோகேஷ் கனகராஜ் உடன் இணைவது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். ஆனால் அதற்கு முன்பே லோகேஷ், அமீர்கானை வைத்து ஒரு புது சம்பவம் செய்ய ரெடியாகிவிட்டார். மோஸ்ட் வான்டட் இயக்குனர் மற்றும் நடிகராக பாலிவுட்டில் பட்டையை கிளப்பி வருபவர் அமீர் கான்.

ரஜினியின் கூலி படம் ஹைதராபாத்தில் தற்சமயம் சூட்டிங் நடைபெற்று வருகிறது. அதற்கு முன்பாக இந்த படத்தின் பழைய ஷெட்யூல் சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஓல்டு உட்லண்ட்ஸ் திரையரங்கில் நடைபெற்றது. இந்த இடத்தில் ஷூட்டிங் நடைபெற்ற பொழுது ரஜினிகாந்த் கிட்டத்தட்ட 20 நிமிடங்கள் தலைமறைவாகியுள்ளார்.

ஓல்ட் உட்லண்ட்ஸ் தியேட்டரில் பல வருடங்கள் கழித்து இப்பொழுதுதான் ரஜினி ஷூட்டிங்கில் கலந்து கொள்கிறார் ரஜினி சூப்பர் ஸ்டார் ஆவதற்கு முன்பு அந்த இடத்தில் சூட்டிங் நடைபெற்றுள்ளது. அதன் பின் இப்பொழுதுதான் மீண்டும் நடிக்க சென்றுள்ளார். இதுதான் ரஜினிக்கு பழைய நினைவுகளை எல்லாம் தூண்டியுள்ளது.

20 நிமிஷம் தலை மறைவான ரஜினிகாந்த்

கூலி படத்தில் நடிக்கும் சக நடிகர்களுடன் பழைய நினைவுகளை எல்லாம் பகிர்ந்துள்ளார் ரஜினிகாந்த். அங்கேதான் ஓய்வு எடுப்பேன், இங்கே இப்படி நடந்தது, அதுதான் நான் சாப்பிடும் இடம் என பல நிகழ்வுகளை கூறியுள்ளார். அதன் பின் என்னை 20 நிமிடம் தனியாக விடுங்கள் எனக் கூறி ஒரு இடத்தில் அமைதியாக உட்கார்ந்து பழைய நினைவுகளை எல்லாம் அனுபவித்திருக்கிறார்.

கூலி படம் ஒரு பான் இந்தியா படமாக வெளிவர இருக்கிறது. இதில் ரஜினிகாந்த், சிவகார்த்திகேயன், சுருதிஹாசன், சத்யராஜ், போன்றவர்கள் நடிக்கிறார்கள். இப்பொழுது கன்னட நடிகர் உபேந்திராவும் புதுவராக இணைந்துள்ளார். இதற்கிடையில் அடுத்த படத்திற்காக அமீர் கானை சந்தித்த லோகேஷ் கனகராஜ். ரஜினியின் கூலி படத்திற்கும் கேமியோ ரோல் பண்ணுவதற்காகவும் சைடு கேப்பில் கொக்கி போட்டுள்ளார். அமீர்கான் அதற்கு பச்சைக்கொடி காட்டினாரா என்பது தெரியவில்லை.

Next Story

- Advertisement -