Connect with us
Cinemapettai

Cinemapettai

ரஜினி பயத்தில் திமுக.. ரஜினி ரசிகர்கள் செய்த சிறப்பான தரமான சம்பவம்

rajini-stalin

Politics | அரசியல்

ரஜினி பயத்தில் திமுக.. ரஜினி ரசிகர்கள் செய்த சிறப்பான தரமான சம்பவம்

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 12ஆம் தேதி ரஜினியின் பிறந்தநாள் அன்று அடுத்த சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவதாக தனது அரசியல் அறிவிப்பை வெளியிட்டார். அன்றிலிருந்து மற்ற கட்சியினருக்கு சிறிது கதி கலங்கியது என்று சொல்லலாம்.

இருந்தும் சிலர் ரஜினிக்கு அரசியல் செட் ஆகாது என்றும், அரசியல் அனுபவம் இல்லை என்றும் கூறிவருகின்றனர். ஆனால் 1996 ஆம் ஆண்டு நேரடியாக அம்மையார் ஜெயலலிதாவை எதிர்த்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினியின், ரஜினி மக்கள் மன்றத்தினர் அவ்வப்போது பொது சேவைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதேபோல் திமுக தலைவர் ஸ்டாலின் தொகுதியான கொளத்தூர் தொகுதியில், சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் அங்கு உள்ள பள்ளிக்கூடம் ஒன்றை மறுசீரமைப்பு செய்து, அதனை கல்வெட்டில் பதிவிட்டு இருந்தனர். இதனைக்கண்ட திமுகவினர் அந்த கல்வெட்டை அகற்றக்கோரி பெரும் பிரச்சனைகளை உண்டாக்கி வந்தனர். இறுதியாக அவர்களே அந்த கல்வெட்டை பெயர்த்து எடுத்தனர்.

இதனால் ரஜினி ரசிகர்கள், ரஜினியை கண்டு திமுகவினர் பயந்து விட்டனர் என்பதை குறிக்கும் வகையில் #ரஜினி_பயத்தில்_திமுக என்ற ஹேஷ்டக் ஒன்றை உருவாக்கி ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து வந்தனர். சிறிது நேரத்தில் இது இந்திய அளவில் டிரெண்ட் ஆனது.

சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்ததைப்போல ரஜினியின் அரசியல் இன்றைய வருகையை இந்திய அளவில் ட்ரெண்ட் செய்துவிட்டனர் அவரது ரசிகர்கள்.

rajini-bayathil-dmk

rajini-bayathil-dmk

இனிமேல் தான பாக்க போற இந்த காளியோட ஆட்டத்தை..

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top