சூப்பர் ஸ்டாருக்காக களமிறங்கும் டாப் ஸ்டார்.? பகிரங்கமாக வெளியிட்ட பேட்டி!

தமிழ்நாட்டில் சமீபகாலமாக அதிகம் பேசபட்டு வரும் செய்தி என்றால் அடுத்த முதலமைச்சர் யார் என்பது தான். முதலில் காமராஜர், அண்ணா போன்ற உண்மை தலைவர்கள் மக்களுக்காக தொண்டாற்றி வந்தனர்.

ஆனால் இப்ப எல்லாம் மக்களுக்கு சேவை செய்வதாக கூறி பல நடிகர்கள் அரசியல் களத்தில் குதித்துள்ளனர். அதில் கமலஹாசன் மற்றும் ரஜினிகாந்தும் இடம்பிடித்துள்ளன. யார் வேண்டுமானாலும் தேர்தலில் போட்டியிடலாம் ஆனால் வெற்றி பெற்றவுடன் படங்களில் நடிப்பது போல் அரசியலில் நடத்தி விடக்கூடாது என்பதே அனைவரது ஆசை என்றே கூறலாம்.

தற்போது தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது, அதற்காக அரசியல்வாதிகள் உட்பட ரஜினிகாந்தும் தற்போதுலிருந்து வாக்கு சேகரிக்க ஆரம்பித்துவிட்டார். தொடர்ந்து தனது கொள்கைகளையும் திட்டங்களையும் அவ்வப்போது மக்களிடம் எடுத்துக்கூறிவருகிறார்.

ரஜினிகாந்த்திற்காக ராகவா லாரன்ஸ் ஒரு காலத்தில் ஆதரவாகப் பேசினார். மேலும் ரஜினிகாந்தின் திட்டங்கள் தனக்குப் பிடித்ததிருந்ததாக கூறினார் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே.

தற்போது அதே வரிசையில் பிரசாந்தும் இடம் பிடித்துள்ளார். ஒரு காலத்தில் கொடி கட்டிப் பறந்த பிரசாத் ஒரு சில காரணங்களால் திரைப்படங்களில் கவனம் செலுத்த முடியாமல் படிப்படியாக தனது வெற்றியை குறைத்துக் கொண்டார் என்றே கூறலாம்.

prashanth rajini
prashanth rajini

அதுமட்டுமில்லாமல் நடிகர் பிரசாந்த் ரஜினிக்காக வாக்கு சேகரிப்பததாக சமூகவலைதளங்களில் தகவல்கள் பரவி வந்தன. அந்த சூறைக்காற்று அழிப்பது போல் நடிகர் பிரசாந்த் நான் யாருக்காகவும் வாக்கு சேகரிக்க வில்லை என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். தற்போது இந்த வதந்திகளுக்கு முற்றுபுள்ளி வைத்து விட்டார் என்றே கூறலாம். எது எப்படியோ ஆட்சிக்கு வந்து நல்லது செய்தால் சரி.