Connect with us
Cinemapettai

Cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

ரஜினி படத்தில் நடிக்க நாயகி தேடுதல் வேட்டை நடத்தும் கார்த்திக் சுப்புராஜ்.!

சூப்பர் ஸ்டார் ரஜினி, கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக திரையுலகில் முத்திரை பதித்து வருகிறார். சூப்பர் ஸ்டார் என்ற அடையாளத்துடன் அழைக்கப்படும் ரஜினிக்கு பட்டி தொட்டி முதல் மாநகரங்கள் வரை ரசிகர்கள் இருக்கிறார்கள். அவரின் ஸ்டைல், வசன உச்சரிப்பு என ஒவ்வொரு அசைவும் ரசிகர்களால் கொண்டாடப்படும்.
பிஸியாக நடித்துக் கொண்டிருந்த ரஜினி, ஒரு கட்டத்தில் ஒரு படம் மட்டுமே என்ற முடிவுக்கு வந்தார்.

அதாவது ஒரு படத்தில் நடித்து முடித்து அதற்கான வேலைகள் முடிந்து ரிலீஸான பின்னரே அடுத்த படம் என்று அவர் முடிவெடுத்திருந்தார். இடையில் அவருக்கு ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாகவே அந்த முடிவு எடுக்கப்பட்டது. ஆனால், இது எல்லாம் கபாலி படத்தை ஒப்புக் கொள்ளும் முன்னர் இருந்த நிலை. ஒரு நேரத்தில் ஒரு படம் என்ற கொள்கையைத் தளர்த்திய ரஜினி, கபாலி படம் மூலம் இளம் இயக்குநர்கள் பக்கம் தன் பார்வையைத் திருப்பினார். மெட்ராஸ் படம் மூலம் கவனம் ஈர்த்த பா.ரஞ்சித்தை அழைத்து கபாலி படத்தின் வாய்ப்பைக் கொடுத்தார். அந்த படம் வெளியாகி ரசிகர்களுக்கு, ரஜினியின் இன்னொரு முகத்தை அறிமுகப்படுத்தியது.

அதையடுத்து பிரமாண்ட இயக்குநர் ஷங்கருடன் எந்திரன் படத்தின் 2-ம் பாகமான 2.0 வுக்காகக் ரஜினி கைகோர்த்தார். 450 கோடி பட்ஜெட்டில் மிக பிரமாண்டமாகத் தயாராகி வரும் அந்த படத்தின் கிராபிக்ஸ் வேலைகள் முடிய அதிக காலம் எடுக்கும் என்பதால், இடையில் ஒரு படம் நடித்து விடலாம் என நினைத்த ரஜினி, அந்த வாய்ப்பை தனது மருமகன் தனுஷின் வொண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனத்துக்கு அளித்தார். கபாலி படத்தை இயக்கிய ரஞ்சித்தே இந்த படத்தையும் இயக்குவது என முடிவானது. காலா என்று பெயரிடப்பட்ட அந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து முடிந்திருக்கிறது.

அதேபோல், 2.0 படம் தாமதமாவதால் காலா படத்தை முதலில் வெளியிட முடிவு செய்து, சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் படத்தின் ஆடியோ ரிலீஸ் விழா பிரமாண்டமாக நடத்தி முடிக்கப்பட்டிருக்கிறது. படம் ஜூன் 7-ம் தேதி வெளியாகிறது.

அரசியல் பணிகளில் ஆர்வம் காட்டி வருவதால், ரஜினி அடுத்தடுத்த படங்களில் நடிப்பதைக் குறைத்துக் கொள்வார் என்று ரசிகர்கள் நினைத்திருந்தனர். ஆனால், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இளம் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக திடீரென ஒரு அறிவிப்பு வெளியானது. இதனால், நடிகர் ரஜினியின் ரசிகர்கள் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தனர். இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.

படத்தின் ஷூட்டிங் உத்ராகண்ட் உள்ளிட்ட இமயமலை அடிவாரப் பகுதிகளில் நடக்க இருக்கிறது. படத்தில் ரஜினிக்கு மகள் கதாபாத்திரம் ஒன்று இருப்பதாகச் சொல்லப்படுகிறது. அந்த கேரக்டரில் நடிக்க சரியான நடிகையைத் தேர்வு செய்யும் பணியில் கார்த்திக் சுப்புராஜ் இப்போது தீவிரமாக ஈடுபட்டிருக்கிறாராம். விரைவில் படப்பிடிப்பு தொடங்க இருப்பதால், மற்ற நடிகர்களை முடிவு செய்யும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறதாம்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top