Tamil Cinema News | சினிமா செய்திகள்
தர்பார் – மிரட்டல் வில்லனாக ரஜினியுடன் அடிதடியில் இறங்கும் பிரபல நடிகர்..

darbar : முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் திரைப்படம் தர்பார் இந்த திரைப்படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளிவந்து ரசிகர்களை கொண்டாட வைத்தது.
படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார், இதற்கு முன் ரஜினியின் குசேலன் படத்தில் நயன்தாரா நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது, மேலும் இந்த படத்தில் வில்லன் யார் என்ற கேள்வி அனைத்து ரசிகர்களிடமும் இருந்தது.
முருகதாஸ் இயக்கிய கத்தி திரைப்படத்திலும், துப்பாக்கி திரைப்படத்திலும் பாலிவுட் நடிகரையே வில்லனாக வைத்தார், அதேபோல் தர்பார் படத்திலும் பாலிவுட் நடிகரை வில்லனாக இறக்கியுள்ளார்.
ஹிந்தியில் வெளியான விண்ணை தாண்டி வருவாயா படத்தில் நடித்த பிரதீக் பப்பர் அதான் ரஜினிக்கு வில்லனாக நடிக்க இருக்கிறார் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
prateik-babbar