தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டிற்கு முன்னணி நடிகர்களான கமல், சிம்பு, சிவகார்த்திகேயன், ஜி.வி. பிரகாஷ்…என அனைவரும் தங்களுடைய ஆதரவை தெரிவித்துள்ளனர். ஆனால் இன்னும் இது பற்றி சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் எந்த விதமான கருத்தும் கூறாமல் தொடர்ந்து மவுனம் காத்து வருகிறார்….இவர் மவுனமாக இருப்பது ஏன் என்று கேள்வி எழுந்துள்ளது.

தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இதனால் கடந்த 2 ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு நடத்தப்படவில்லை. இந்நிலையில் இந்த ஆண்டாவது ஜல்லிக்கட்டை நடத்த அனுமதி கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக சென்னை, மதுரை ஆகிய நகரங்களில் மாபெரும் பேரணி நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் கலந்து கொண்டனர்.

சிவகார்த்திகேயன்

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடிகர் சிவகார்த்திகேயன் ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். அவரது ட்வீட், ‘ஏறுதழுவுதல் எம் தமிழர்களின் கலாச்சாரம்,பண்பாடு..அதை மீட்க விரும்பும் பல கோடிபேரில் ஒரு தமிழனாய் நானும்?#WeNeedJallikattu’

கமல்

ஜல்லிக்கட்டு என்று கூறாதீர்கள் ஏறுதழுவுதல் என்று கூறுங்கள் என உலக நாயகன் கமல் ஹாஸன் தெரிவித்துள்ளார். காளைகளை தழுவுகிறோமே தவிர அவற்றை காயப்படுத்துவது இல்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஜி. வி. பிரகாஷ்

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக ‘கொம்புவச்ச சிங்கம்டா’ என்ற பாடலை வெளியிடுகிறார் ஜி.வி. பிரகாஷ். இதன் பாடல் மூலம் வரும் வருமானத்தை நலிவடைந்த விவசாயிகளின் குடும்பத்திற்கு உதுவுவதாக அவர் ஏற்கனவே கூறியுள்ளார்.

சிம்பு

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக முதலில் அறிக்கை வெளியிட்டவர் நடிகர் சிம்பு தான். மேலும் ட்விட்டரிலும் தனது ப்ரொபைல் படம் மூலமும் ஜல்லிக்கட்டை ஆதரித்துள்ளார்.

https://twitter.com/iam_str/status/814770249736155136

ரஜினி

ஜல்லிக்கட்டிற்கு சீனியர் முதல் ஜூனியர் நடிகர்கள் வரை அனைவரும் ஆதரித்து வரும் நிலையில், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் ஆதரவு தெரிவிக்க மாட்டாரா…? என்பதுதான் இப்போது அனைவரும் எதிர்பார்க்கும் கேள்வியாக உள்ளது.