ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 10, 2024

ரஜினிக்காக இறங்கி வந்த ஐஸ்வர்யா.. திமிரு காட்டும் தனுஷ்

நாளுக்கு நாள் தன்னுடைய நிலைமையை பார்த்து தந்தையின் மனது மிகவும் வேதனைப்படுகிறது என்பதை உணர்ந்த ஐஸ்வர்யா மீண்டும் தனுசுடன் வாழ ஓகே சொன்னதுபோல் செய்திகள் வந்து கொண்டிருக்கும் நிலையில் திடீரென ஒரு ட்விஸ்ட் கிளம்பியுள்ளது.

ஐஸ்வர்யா மற்றும் தனுஷ் ஆகிய இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்ட கிட்டதட்ட 18 வருடங்கள் கணவன் மனைவியாக வாழ்ந்து வந்த நிலையில் சமீபத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்து விட்டனர். ஒருபக்கம் தனுஷின் நடவடிக்கைகள் சரியில்லை என செய்தி வந்தால் இன்னொருபக்கம் ஐஸ்வர்யாவின் குடும்பத்தினர் தனுஷை டார்ச்சர் செய்ததாக இன்னொரு பக்கம் செய்தி.

இதில் எது உண்மை என்பதை தெரிந்துகொள்வதற்கு இல்லையே அடுத்தடுத்த நிகழ்ச்சிகள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. சமீபத்தில் கூட ஐஸ்வர்யாவிடம் ரஜினி தனிப்பட்ட முறையில் போன் செய்து தன்னுடைய ஆதங்கத்தை கொட்டித் தீர்த்த தாகவும் அதன்பிறகு ஐஸ்வர்யா அப்பாவின் பெயரை காப்பாற்ற தனுஷுடன் சேர்ந்து வாழ முடிவை எடுத்ததாகவும் கூறுகின்றனர்.

இதுகுறித்து தனுஷின் தந்தை கஸ்தூரி ராஜாவிடம் ஐஸ்வர்யா போன் செய்து விஷயத்தை சொல்ல அவரும் இதுதான் சரி என இருவரையும் சேர்த்து வைப்பதற்கான ஏற்பாடுகளை செய்து விட்டாராம். அதுமட்டுமில்லாமல் பத்திரிக்கையாளர்கள் தான் இப்படி உங்களை பற்றிய செய்திகளை பேசிக் கொண்டிருக்கின்றனர் அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இருவரும் சேர்ந்து மீண்டும் ஏதாவது ஒரு கோவிலுக்கு சென்று வாருங்கள் என அட்வைஸ் செய்துள்ளார் கஸ்தூரிராஜா.

ஆனால் இதெல்லாம் மருமகள் ஐஸ்வர்யாவிடம் சொன்னாரே தவிர மகன் தனுஷிடம் சொல்லவில்லை போல. விஷயத்தைக் கேட்டதும் வெடித்த தனுஷ் யாரைக் கேட்டு இதெல்லாம் முடிவு செய்தீர்கள் இனிமேல் அவருடன் சேர்ந்து வாழ முடியாது என திட்டவட்டமாக தெரிவித்து விட்டாராம்.

ஐஸ்வர்யாவே இறங்கி வந்த நிலையில் தனுஷ் இப்படி செய்வது சரியில்லை என தான் ரஜினி குடும்பத்தில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. தனுஷ் மீதான நன்மதிப்பு கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து வருவதாக ரஜினியும் ஃபீல் செய்கிறாராம். இதனால் விரைவில் ரஜினி தனுஷ் ஆகிய இருவருக்கும் இடையே பெரிய பிளவு ஏற்பட அதிக வாய்ப்பு இருக்கிறது என்கிறது சினிமா வட்டாரம்.

- Advertisement -spot_img

Trending News