Connect with us
Cinemapettai

Cinemapettai

ajith-rajini-cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

பில்லா படத்தை பார்த்துவிட்டு ரஜினி சொன்ன அந்த வார்த்தை.. இதை சற்றும் எதிர்பார்க்காத அஜித்

இந்திய சினிமாவில் பழைய சூப்பர் ஹிட் படங்களை அந்தந்த காலத்திற்கு ஏற்ப அந்தந்த காலகட்டங்களில் முன்னணி நடிகர்களாக இருக்கும் சிலர் ரீமேக் செய்து நடித்தனர். அப்படி தமிழ் சினிமாவில் ரீமேக் செய்தவர்தான் தல அஜித்.

1980 ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் தான் பில்லா. கிருஷ்ணமூர்த்தி என்பவர் இயக்கியிருந்தார். ரஜினிகாந்த் இரட்டை வேடத்தில் நடித்த பில்லா படம் பட்டிதொட்டியெங்கும் பட்டையை கிளப்பியது.

ரஜினியின் பில்லா படத்தை 2007ஆம் ஆண்டு தல அஜித் பில்லா என்ற பெயரில் மீண்டும் ரீமேக் செய்து நடித்தார். இன்டர்நேஷனல் டான் கதாபாத்திரத்திற்கு நச்சென பொருந்தியிருந்தார் தல அஜித். விஷ்ணுவர்தன் இயக்கியிருந்த இந்தப் படம் வசூலில் சக்கைப்போடு போட்டது. மேலும் அந்த படத்திற்கு முக்கிய பலம் செய்தவர் இசையமைப்பாளர் யுவன் தான்.

தற்போது பில்லா திரைப்படம் மீண்டும் தமிழகம் எங்கும் பல திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் ஆக உள்ளது. இதனை தல ரசிகர்கள் வரவேற்றுள்ளனர். மேலும் கடந்த ஒரு வருடங்களுக்கு மேலாக தல அஜித் நடிப்பில் எந்த ஒரு படமும் வெளியாகாததால் பில்லா படத்தை ரசிகர்கள் கொண்டாட திட்டமிட்டுள்ளனர்.

billa-ajith-cinemapettai

billa-ajith-cinemapettai

இந்த நேரத்தில்தான் பில்லா படத்தை தயாரித்த ஆனந்தா எல் சுரேஷ் என்பவர் சமீபத்திய பேட்டி ஒன்றில் பில்லா படத்தை பார்த்துவிட்டு ரஜினி கூறிய கமெண்டை தெரிவித்துள்ளார். ரஜினி அஜித்தின் பில்லா படத்தை பார்த்துவிட்டு, நான் நடித்த பில்லா படத்தை விட நீங்க ரொம்ப ஸ்டைலிஷா பண்ணிருக்கீங்க எனவும், இப்படி மிரட்டலாக ரீமேக் படம் வரும் என எதிர்பார்க்க வில்லை என மிரண்டுபோய் கூறியிருந்தாராம் ரஜினிகாந்த்.

மேலும் அஜித் நீங்கள் நடித்ததால் மட்டுமே இந்தப் படம் சிறப்பாக வந்திருப்பதாகவும், நீங்க வேணா பாருங்க, பில்லா படம் பட்டிதொட்டி எங்கும் மீண்டும் பட்டையை கிளப்பும் என அவர் சொன்னதைப் போலவே அஜித்தின் பில்லா படம் வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றியை கொடுத்து அதுவரை தொடர் தோல்விகளை சந்தித்துக் கொண்டிருந்த அஜித்துக்கு பெரிய கம்பேக் படமாக அமைந்தது எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

Continue Reading
To Top