சனிக்கிழமை, டிசம்பர் 14, 2024

விஜய் அரசியல் சாதிக்க மாட்டார்.. மொத்த வன்மத்தையும் கக்கிய தலைவரின் ரத்த உறவு

Vijay: தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் தான் இப்போது அரசியல் வட்டாரங்களில் பெரும் பிரளயத்தை ஏற்படுத்தி இருக்கிறார். கடந்த மாதம் அவர் நடத்திய மாநாடு எதிர்பார்த்ததை விட அதிக வரவேற்பு பெற்றதோடு மக்களின் ஆதரவையும் பெற்றுள்ளது.

எந்த அரசியல் கட்சி தலைவரையும் தாக்கி பேச நான் வரவில்லை. எங்களுடைய அரசியல் நாகரீகமானது. கொச்சையான வார்த்தைகளை பயன்படுத்த மாட்டோம் என்று அவர் சொன்னதே மக்கள் மத்தியில் அவருக்கான நன்மதிப்பை பெற்றுள்ளது.

ஆனால் அவரை ஓரங்கட்ட வேண்டும் என்பதற்காகவே சில அரசியல் கட்சிகள் தேடி தேடி குறைகளை சொல்லி வருகின்றன. இது ஒரு புறம் இருக்க விஜய்க்கு அனைவரும் வாழ்த்து தெரிவித்த சூழலில் ரஜினி மட்டும் வாழ்த்தவில்லை என்ற கேள்வி இருந்தது.

வரும் தேர்தலில் விஜய் ஜெயிப்பாரா.?

அந்தக் குறையும் தற்போது தீர்ந்து விட்டது. சூப்பர் ஸ்டார் விஜய்யின் அரசியல் வருகைக்கு வாழ்த்து தெரிவித்துவிட்டார். ஆனால் அவருடைய அண்ணன் சத்யநாராயண ராவ் விஜய்யால் அரசியலில் சாதிக்க முடியாது என பேட்டி கொடுத்துள்ளார்.

மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் விஜய் அரசியலுக்கு வந்து எந்த பிரயோஜனமும் இல்லை. அவரால் சாதிக்க முடியாது. முயற்சி செய்யட்டும் என தெரிவித்துள்ளார். இது தளபதி ரசிகர்களை கொந்தளிக்க வைத்துள்ளது

இதே சத்யநாராயண ராவ் தான் தன் தம்பி அரசியலுக்கு வருகிறேன் என்று சொன்னபோது ஆசீர்வதித்து வாழ்த்தினார். கடவுள் அருளால் என் தம்பி ஜெயிப்பார் மக்களுக்கு நல்லது செய்வார் என்று கூறினார்.

ஆனால் இப்போது விஜய்யின் அரசியலைப் பற்றி அவர் பேசி இருப்பது முழு வன்மம் தான். ஒருவித பொறாமையும் கூட என விஜய் ரசிகர்கள் அவரை வறுத்து எடுத்து வருகின்றனர். இவ்வளவு எதிர்ப்புகளை தாண்டி விஜய் அரசியலில் தனி முத்திரை பதிப்பாரா என்பது வரும் தேர்தலில் தெரியவரும்.

- Advertisement -

Trending News