கமல் சொன்னதை கண்முடித்தனமாக நம்பிய ரஜினி.. எவ்வித களங்கமும் இல்லாமல் ஜெயித்த நட்பு

Rajini and Kamal Friendship: தற்போது அனைவரும் திருவிழா மாதிரி ஜெயிலர் படத்தை கொண்டாடி வருகிறார்கள். இப்படத்தின் வெற்றி துவண்டு போயிருந்த இரண்டு பேருக்கு கிடைத்த மாபெரும் வெற்றி. அதாவது ரஜினி நடிப்பில் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு வெளிவந்த அண்ணாத்த திரைப்படம் கலவையான விமர்சனத்தை கொடுத்தது. அதே மாதிரி நெல்சன் இயக்கிய பீஸ்ட் படம் ரசிகர்களிடமிருந்து மொக்கை வாங்கியது.

இப்படி இவர்கள் இரண்டு பேரும் தோற்றுப் போய் இருந்த நிலையில் மறு ஜென்மமாய் இவர்களுக்கு கிடைத்த வாய்ப்பு தான் ஜெயிலர். ஆனாலும் ரஜினி நெல்சன் மீது நம்பிக்கையை வைத்து படத்தை இயக்கும் வாய்ப்பை கொடுத்தார். இருந்தாலும் ரஜினிக்கு ஏதோ தயக்கம் ஏற்பட்டிருக்கிறது.

Also read: ஜெயிலர் நரசிம்மனை தட்டி தூக்கிய விடாமுயற்சி படக்குழு.. ரஜினியை ஃபாலோ பண்ணும் அஜித்

அதன் பின் இதற்கு தீர்வாக ஒரு முடிவை எடுத்தார். அதாவது இவருக்கு பொதுவாக எந்த ஒரு விஷயம் சினிமா பத்தி சந்தேகங்கள் வந்தாலும் அதை சரி செய்யும் விதமாக இவருடைய நண்பர் கமலஹாசனிடம் கேட்டு முடிவு எடுத்து விடுவார். அந்த வகையில் நெல்சன் இடம் படம் பண்ணலாமா வேண்டாமா என்று கேட்டிருக்கிறார்.

இவர் கேட்டதும் கமல் ஆராய்ந்து ஒரு தெளிவான விளக்கத்தை கூறியிருக்கிறார். அதாவது கைதி படம் லோகேஷ் க்கு மாபெரும் வெற்றியை கொடுத்து, மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. அதன் பின் மாஸ்டர் இயக்கிய படம் வசூல் அளவில் வெற்றி பெற்றாலும் கைதி அளவுக்கு இல்லை. ஆனாலும் லோகேஷை நம்பி நான் விக்ரம் படத்தை கொடுத்தேன்.

Also read: நெல்சனை வளைக்கும் கமல்.. ரஜினி ஃபார்முலாவை ஃபாலோ பண்ணும் உலகநாயகன்

எனக்கு நினைத்துப் பார்க்காத அளவிற்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்து தற்போது என்னை உயர்த்தி விட்டார். அதேபோல் நீங்களும் நெல்சனை  நம்பலாம். பீஸ்ட் படத்தின் தோல்வி எல்லாம் நினைத்து பார்க்க வேண்டாம். அவரை நம்பி தைரியமாக இறங்குங்கள் கண்டிப்பாக வெற்றி கிடைக்கும் என்று கமல், ரஜினி இடம் கூறியிருக்கிறார்.

அதன் பின்னரே ரஜினி வேற எதைப் பற்றியும் யோசிக்காமல் கண்ணை மூடிக்கொண்டு நெல்சன் இயக்கத்தில் நடிப்பதற்கு ஒத்துக் கொண்டார். மேலும் அவரை சுதந்திரமாக வேலை செய்ய விட்டு நெல்சனின் படமாக எடுக்க வைத்து இப்பொழுது அதற்கேற்ற மாதிரி வெற்றியும் பெற்று விட்டார். இதில் கமல் மற்றும் ரஜினியின் இவர்களிடையே இருக்கும் ஆழமான நட்பு அழகாக தெரிகிறது.

Also read: ரஜினி, கமல் இடத்தை பிடிக்கும் அடுத்த தலைமுறை நடிகர்கள்.. பட்டமே வேண்டாம் என்று ஒதுங்கும் அஜித்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்