Connect with us
Cinemapettai

Cinemapettai

rajinikanth-01

Tamil Cinema News | சினிமா செய்திகள்

அவசர அவசரமாக கமர்சியல் இயக்குனருடன் கூட்டணி அமைக்கும் ரஜினி.. அதுக்குள்ள என்னாச்சு தலைவரே!

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திர நடிகராக வலம் வரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அண்ணாத்த படத்திற்கு பிறகு யார் இயக்கத்தில் நடிக்கப்போகிறார்? என்ற குழப்பம் இன்னும் நீடித்துக் கொண்டே இருக்கிறது.

ரஜினிகாந்த் தற்போது சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த படத்தில் நடித்து முடித்துள்ளார். நீண்ட நாட்களாக நடந்து வரும் இந்த படத்தின் படப்பிடிப்புகள் இன்னும் முடிந்தபாடில்லை.

ஆனால் ரஜினி தான் சம்பந்தப்பட்ட காட்சிகளை நடித்துக் கொடுத்து அதற்கு டப்பிங் பணிகளையும் முடித்து கொடுத்துவிட்டார். அதனைத் தொடர்ந்து அடுத்ததாக ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தில் இளம் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்க போவதாக தொடர்ந்து செய்திகள் வந்தவண்ணம் இருந்தன.

ஆனால் தற்போது அதில் ஒரு மிகப் பெரிய ட்விஸ்ட் ஏற்பட்டுள்ளது. முன்னதாக ரஜினி தேசிங்கு பெரியசாமி படத்தின் பட்ஜெட் சுமார் 200 கோடியை தாண்டி விட்டதாக கூறுகின்றனர். ஏற்கனவே மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட தர்பார் போன்ற சில படங்கள் ரஜினிக்கு மிகப்பெரிய அவப்பெயரை ஏற்படுத்தி விட்டதால் இந்த நேரத்தில் இவ்வளவு பெரிய பட்ஜெட் படம் தேவையா? எனவும் யோசிக்கிறாராம்.

அதனால் தற்போது தமிழ் சினிமாவின் பக்கா பட்ஜெட் கமர்சியல் இயக்குனராக வலம் வரும் பாண்டிராஜிடம் ரஜினிகாந்த் ஒரு கதை கேட்டுள்ளதாக ஒரு செய்தி வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

பாண்டிராஜ் தற்போது சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூர்யா நடிக்கும் எதற்கும் துணிந்தவன் படத்தை இயக்கி வருகிறார். ரஜினியும் சமீபத்தில்தான் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஒரு படத்தை முடித்ததால் கண்டிப்பாக இந்த சந்திப்பு நடந்திருக்க அதிக வாய்ப்பிருக்கிறது என்கிறது சினிமா வட்டாரம்.

rajinikanth-pandiraj-cinemapettai

rajinikanth-pandiraj-cinemapettai

Continue Reading
To Top