அடக்கமாக இருப்பதாலேயே அக்கம் பக்கத்தை அன்பு கொள்ள வைத்துக் கொண்டிருக்கிறார் விஜய் ஆன்ட்டனி. அப்படிப்பட்டவருக்கு ரஜினி புறத்திலிருந்து சாந்தியும் சமாதானமும் வந்து சேர்வதில் ஒன்றும் வியப்பில்லையே?

நேற்று அதுதான் நடந்திருக்கிறது. சமீபத்தில் திரைக்கு வந்த எமன் படத்தை தன் வீட்டிலிருக்கும் பிரத்யேக தியேட்டரில் பார்த்து ரசித்தாராம் ரஜினி. கையோடு கையாக விஜய் ஆன்ட்டனிக்கு போன் போட்டு பாராட்டியிருக்கிறார். நினைத்தால் இந்த பாராட்டையே போஸ்டர் அடித்து புது கலெக்ஷன் பார்த்திருக்கலாம் எமன் வட்டாரம். ஆனால் அது வேண்டாம் என்று அமைதியாக இருந்துவிட்டார்கள்.

ஏன் வேண்டாம்? படம்தான் நல்ல கலெக்ஷனில் போய் கொண்டிருக்கிறதே? அதனால்தான்.. முதல் மூன்று நாட்களில் சுமார் 8 கோடி ரூபாய் அளவிற்கு வசூல் செய்துள்ளதாக படக்குழு கூறுகிறது.