அவ்ளோ பெரிய மனுஷன் ரஜினி எங்கிட்ட மன்னிப்பு கேட்டாரு.. ரித்திக் ரோஷன் கூறிய காரணம் என்ன தெரியுமா?

Rajini and Hrithik Roshan: ரஜினியின் நடிப்பும் ஸ்டைலும் அனைவரையும் கவர்ந்து இழுத்து இருக்கிறது என்பதையும் தாண்டி நிஜத்திலேயே கள்ளம் கபடம் அற்ற ஒரு நடிகராகவே அனைத்து ரசிகர்களும் பார்க்கப்பட்டு வருகிறார்கள். அதற்கு காரணம் எந்த உயரத்துக்கு போனாலும் தன்னுடைய உண்மையான குணத்தை மாற்றக்கூடாது என்ற விஷயத்தில் தீர்க்கமாக இருக்கிறார்.

அப்படிப்பட்ட இவர் வயசு வித்தியாசம் பார்க்காமல் கூட ஒருவருக்கு மரியாதை கொடுத்து பேசுவதும், அவர்களிடம் கண்ணியமாக நடந்து கொள்ளும் பண்பையும் கொண்டவர் என்று பலரும் ரஜினியை பற்றி சொல்லி இருக்கிறார்கள். அந்த வகையில் தற்போது பாலிவுட் நடிகர், ஆணழகன் அனைவரையும் கவர்ந்த ஸ்டார் என்று கூறப்படும் ரித்திக் ரோஷனும் ரஜினியை பற்றி மிகப் பெருமையாக பேசி இருக்கிறார்.

அதாவது தற்போதைய காலங்களில் முன்னணி நடிகர்கள் தமிழ் படங்களையும் தாண்டி அனைத்து பக்கங்களிலும் கவனம் செலுத்தி நடித்து வருகிறார்கள். ஆனால் இந்த ஒரு விஷயம் கமல், ரஜினி காலங்களையே ஆரம்பித்துவிட்டது. கமல் மற்றும் ரஜினி ஹீரோவாக நடித்து வரும் பொழுது அவர்களும் மற்ற மொழிகளில் நடித்து பிரபலமாகி இருக்கிறார்கள்.

Also read: 24 வருடமாக டாப் கலெக்ஷனில் அசைக்க முடியாத இடத்தில் ரஜினி.. வசூலில் அடித்து நொறுக்கிய 4 படங்கள்

இதன் தொடர்ச்சியாக அவர்கள் அங்கே ரொம்பவே பிரபலமானதால் ஒரு சில பிரச்சினைகளும் இவர்களுடைய கேரியருக்கு பூகம்பமாக வெடித்திருக்கிறது. அதன்பின் நமக்கு ஏன் வம்பு என்று தமிழ் சினிமாவில் மட்டும் நடிக்கலாம் என முடிவு பண்ணி இங்கேயே முழு கவனத்தையும் செலுத்தி நடித்து அசுர வளர்ச்சியை அடைந்து விட்டார்கள்.

இதற்கு இடையில் ரஜினி 1986-இல் ஹீரோவாக  பாலிவுட்டில் நடித்த பொழுது பகவான் தாதா படத்தில் குழந்தை நட்சத்திரமாக ஹிருத்திக் ரோஷன் நடித்திருக்கிறார். இதில் ஏற்பட்ட சில சம்பவங்களை நினைவு கூர்ந்து ரித்திக் ரோஷன் சமூக வலைதளங்களில் பதிவிட்டு இருக்கிறார். அதாவது படபிடிப்பின் போது எண்ணை கஷ்டப்படுத்தி விடக் கூடாது என்ற நினைப்பில் ரொம்பவே கம்போர்ட்டாக வைத்து நடிக்க வைத்தார்.

அத்துடன் அந்த சிறு வயதில் இருக்கும் பொழுது டயலாக்கை மிஸ் பண்ணி சொதப்பி இருக்கிறேன். அதற்கு அவர் என்னை சமாதானப்படுத்துவதற்காக சாரி சாரி என்று கேட்டு சின்ன குழந்தையாக இருந்த எனக்கு மரியாதை கொடுத்து நடந்து கொண்ட விதம் ரொம்பவே அவர் மீது மரியாதையை ஏற்படுத்தி விட்டது. கண்டிப்பாக இதை நான் அவரிடம் இருந்து தான் கற்றுக் கொண்டேன் என்று ஹிருத்திக் ரோஷன் கூறியிருக்கிறார்.

rithik roshan
rithik roshan

Also read: கெஸ்ட் ரோலுக்கு ரஜினியை டார்ச்சர் பண்ணும் ஐஸ்வர்யா.. லால் சலாம் படத்திற்காக கத்துக்கிட்ட விஷயங்கள்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்