Tamil Cinema News | சினிமா செய்திகள்
ரஜினியின் இந்த பதில் ரசிகர்களுக்கு இல்லை.. பின்னணியில் உள்ள சகுனிகள்
நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் திடீரென ஒரு கூட்டத்தைக் கூட்டி பல அறிவிப்பை வெளியிடப் போவதாக செய்திகள் வந்ததும் ரசிகர்கள் வழக்கம்போல் பரபரப்பைக் கிளப்பினார்கள். ஆனால் ரஜினிகாந்தும் வழக்கம்போல் தனது அறிவிப்பை வெளியிட்டார். ஏன் ரஜினிகாந்த் மீண்டும் மீண்டும் ஒரே அறிவிப்பை பல வருடமாக வெளியிட்டு வருகிறார் என்றால் அவர் பின்னணியில் எதோ இருக்கிறது என்றுதான் அர்த்தம்.
இவ்வளவு பெரிய உலக உச்ச நடிகர் இந்த ஒரு விஷயத்தில் மட்டும் இவ்வளவு வருடமாக யோசிப்பது ஏன் தவறுதலாக கூட ஒரு வார்த்தை வெளிவரக் கூடாது என்பதே கவனமாக இருக்கிறார் என்ற சந்தேகம் பலருக்கு இருக்கிறது. ஏதோ ஒரு கட்சி அவரைத் தொடர்ந்து வலியுறுத்தி வருவதாகவும் அதனால் அவர் பதில் சொல்ல முடியாமல் இருக்கிறார் என்பதும் ரசிகர்கள் கூறுகிறார்கள்.
அரசியலுக்கு வரபோவது இல்லை என்று ஒரேடியாக மறுத்தால் தற்பொழுது நன்றாக இருக்கும் தனது உடல், மனம் இரண்டையும் மொத்தமாக காலி செய்து விடுவார்கள் என்பதில் ரஜினி கவனமாக இருப்பதாகவும் கூறுகிறார்கள். அரசியலில் நன்மை நடந்தால் மட்டுமே ஆதரவு, அவரால் ஒரு பிரயோஜனமும் இல்லை என்றால் இத்தனை வருடம் இழுக்கடித்ததற்கு கண்டிப்பாக வேறுவிதமாக கவனித்து விடுவார்கள்.
அதனால் ரஜினியின் இந்த பதில் ரசிகர்களுக்கோ மற்ற மக்களுக்கோ இல்லை அந்த அரசியல் கட்சிக்குதான். தற்போது வரவில்லை என்றால் அடுத்த குறி விஜய் ஆகவும் இருக்கலாம் அல்லது வேறு ஒரு நடிகராகவும் இருக்கலாம் என்பதில் அந்த கட்சி உறுதியாக இருக்கிறது என்றும் கூறுகிறார்கள் ரஜினி ரசிகர்கள். ஆனால் இந்தத் தேர்தலை விட்டால் மீண்டும் ஒரு 5 வருடங்கள் காத்திருக்க வேண்டும். அப்படியானால் ரஜினியின் வயது 74 ஆக இருக்கும்.
அப்போது உள்ள காலகட்டங்களில் ரஜினியின் உடல்நிலையை கருத்தில் கொண்டு வேண்டாம் என்றும் சொல்லலாம் அல்லது ரஜினி வேறு ஒரு தலைவரை அமர்த்தி கட்சியை தொடங்கவும் வாய்ப்பு இருக்கிறது என்று கூறுகிறார்கள் ரஜினி ரசிகர்கள்.
சோனியா காந்தி போல் கட்சியை வழி நடத்தி செல்வார் எனவும் அதேசமயம் அவர் ஆரம்பிக்கப் போகும் கட்சி ரஜினி என்ற ஒரு பிராண்டை நம்பி மட்டுமே இருக்கிறது எனவே அவர் இருக்கும் வரை முழு அதிகாரமும் அவர் கையில்தான் இருக்கும் என்று ரஜினி ரசிகர்கள் கருதுகிறார்கள்.

rajini-politics-fact
இன்னொரு பக்கம் ரஜினியை இப்படி சொல்ல வைப்பதே அந்த அரசியல் கட்சிதான் என்றும் பீதியை கிளப்புகிறார்கள். எது எப்படியோ ரஜினியின் அரசியலுக்கு இந்த தேர்தல் பதில் சொல்லி விடும். இந்த தேர்தலில் வரவில்லை இனி எந்த தேர்தலும் ரஜினிக்கு கிடையாது.
