கூலி, ஜெய்லர் 2 படம் ரிலீஸ் தேதியை ஸ்கெட்ச் போட்ட ரஜினிகாந்த்.. யாருக்கும் வழி விடாத சூப்பர் ஸ்டார்

ரஜினிகாந்த் டிஜே ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். ஜெய்லர் படத்துக்கு பிறகு பல இயக்குனர்களை ஜல்லடை போட்டு அலசி வந்த சூப்பர் ஸ்டாருக்கு லோகேஷ் கனகராஜ் தான் கண்ணில் பட்டுள்ளார்.

சிபி சக்கரவர்த்தி, மணிரத்தினம், கார்த்திக் சுப்புராஜ் என பல பேர் ரஜினியின் லிஸ்டில் இருந்தார்கள் ஆனால் ரஜினி வேட்டையன் படத்திற்கு பின் லோகேஷ் கனகராஜுக்கு வாய்ப்பு கொடுத்தார். இப்பொழுது அவரின் கூலி படத்தின் ஷூட்டிங்கில் பிசியாக இருக்கிறார்.

ரஜினி சினிமாவிற்கு வந்து கிட்டத்தட்ட 49 வருடங்கள் ஆகிவிட்டது.1975 ஆம் ஆண்டு அபூர்வராகங்கள் படத்தின் மூலம் தன்னுடைய சினிமா பயணத்தை தொடங்கினார் ரஜினி. இதுவரை 49 வருடங்கள் ஓடிவிட்டது. 2025 ஆம் ஆண்டு வந்துவிட்டால் தன்னுடைய ஐம்பதாவது வருட கலை பயணத்தை தொட்டுவிடுவார்.

யாருக்கும் வழி விடாத சூப்பர் ஸ்டார்

இதுவரை ரஜினிக்கு திரைத்துறை சார்பில் எந்த ஒரு கௌரவ விருதும் கொடுக்கவில்லை. இப்பொழுது ரஜினியே தன்னுடைய 50 வருட பயண காலத்தை கொண்டாடும் வகையில் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். அடுத்த ஆண்டு அவருடைய இரண்டு படங்களை வெளியிட திட்டமிட்டுள்ளார்.

கூலி மற்றும் ஜெயிலர் 2 படங்களை ரஜினி ரிலீஸ் செய்யும் நோக்கத்தில் இருக்கிறார். லோகேஷ் கனகராஜுன் கூலி படத்தை ஜூன் மாதத்தில் ரிலீஸ் செய்ய வேண்டுமென கூறி இருக்கிறார். அதை போல் நெல்சன் இயக்கும் ஜெயிலர் 2 படத்தை 2025 தீபாவளிக்கு ரிலீஸ் செய்யுமாறு கூறியிருக்கிறார்.

- Advertisement -spot_img

Trending News