கடும் கோபத்தில் ரஜினி.. சமாதானப்படுத்த முடியாமல் விழி பிதுங்கி நிற்கும் ஐஸ்வர்யா

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வீட்டில் நடக்கும் பிரச்சனையை பற்றி தான் தற்போது ஊடகங்களில் பேச்சாக கிடக்கிறது. தன் கணவர் தனுசை விவாகரத்து செய்யப்போவதாக ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா சில மாதங்களுக்கு முன் சோசியல் மீடியாவில் அறிவித்தார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த பலரும் அவர்களுக்குள் என்ன பிரச்சனை என்று தொடங்கி கேள்வி எழுப்பி வருகின்றனர். இது ஒருபுறமிருக்க மகளின் இந்த செயலால் ரஜினி ரொம்ப டென்ஷனாகி விட்டாராம். அவர் எவ்வளவு சொல்லியும் கேட்காமல் ஐஸ்வர்யா விவாகரத்து முடிவில் உறுதியாக இருப்பதுதான் இதற்கு காரணம்.

இதனால் ரஜினி வீட்டில் மனைவி, மகள் என்று யாருடனும் பேசாமல் தனியாக இருந்துள்ளார். எப்படியாவது அப்பாவை சமாதானப்படுத்த வேண்டும் என்று ஐஸ்வர்யா சமூக வலைத்தள பக்கத்தில் தொடர்ந்து போஸ்ட் போட தொடங்கினார். அதாவது நான் சந்தோஷமாகத்தான் இருக்கிறேன் என்று அனைவருக்கும் தெரியப்படுத்தும் வகையில் இருந்தது அவருடைய போஸ்ட்.

அதுமட்டுமல்லாமல் சமீபகாலமாக அவருடைய போஸ்ட் எல்லாம் ஏதோ ஒரு உள்நோக்கத்துடன் இருப்பதாக பலரும் தெரிவித்து வருகின்றனர். அதோடு தன் பெயருக்குப் பின்னால் இருந்த கணவரின் பெயரை நீக்கிவிட்டு தன் தந்தையின் பெயரை ஐஸ்வர்யா இணைத்துக் கொண்டார்.

அப்பாவின் அறிவுரைப்படி கணவருடன் இணைந்து வாழலாம் என்று யோசித்து வந்த வேளையில் தனுஷ் அதற்கு மறுப்பு தெரிவித்தது தான் இதற்கு காரணமாம். மேலும் தனுஷ் சமீபத்தில் தன் பிள்ளைகளுடன் இளையராஜாவின் இசை கச்சேரியை பார்க்க வந்திருந்தார்.

அந்த நிகழ்ச்சியை முடித்துவிட்டு வந்த பேரன்களிடம் ரஜினி அது பற்றி விசாரித்துள்ளார். அதற்கு அவர்கள் அப்பாவுடன் இருப்பது தான் பிடித்திருக்கிறது என்று கூறியிருக்கின்றனர். இதனால் அதிர்ந்து போன ரஜினி தன் மனைவியிடம் முதலில் குடும்பம் அப்புறம் தான் வேலை என்று ஐஸ்வர்யா குறித்து கோபமாக பேசி இருக்கிறார்.

ஐஸ்வர்யாவுக்கும் இந்த செய்தி சென்றுள்ளது. அதனால் அவர் தன் வேலைகளை எல்லாம் அப்படியே விட்டுவிட்டு மகன்களுடன் நேரத்தை செலவு செய்துள்ளார். இதன் மூலம் அப்பாவின் கோபத்தை குறைக்கலாம் என்று அவர் முடிவு செய்துள்ளார்.

அதனால்தான் அவர் சமீபகாலமாக சமூக வலை தளங்களில் பல உருக்கமான போஸ்ட் போட்டு வருகிறார். கணவரை விட்டு பிரிந்த நிலையில் மகன்களும் அப்பாவுடன் இருக்க ஆசைபடுவதால் வந்த கலக்கம் தான் இது என்று கோலிவுட் தற்போது வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.