சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் காலா படத்தை தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் பேட்ட படத்தில் நடித்து வருகிறார் இந்த படத்தின் படப்பிடிப்பு பரபரப்பாக நடந்து வருகிறது, படத்தில் திரிஷா, விஜய்சேதுபதி, சிம்ரன், சசிகுமார், என மிகப்பெரிய நட்சத்திர கூட்டமே நடித்து வருகிறது.

இந்த நிலையில் நேற்று ரஜினி ,திரிஷா, மற்றும் படக்குழுவினருடன் வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோவிலுக்கு சென்றுள்ளார்கள், ரஜினி அங்கு சென்றது  தொலைக்காட்சிகளில் வைரலாகி வருகிறது.

அதிகம் படித்தவை:  இத்தனை கோடி வசூல் செய்ய திட்டமா? கோலிவுட்டை அதிரும் வைக்கும் கபாலி பிளான்

மேலும் நடிகை திரிஷாவும் அந்த கோவிலுக்கு சென்றுள்ளார், அங்கு எடுத்த புகைப்படத்தை தனது அதிகாரபூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் இது தற்பொழுது ரசிகரிடம் வைரலாகி வருகிறது.