fbpx
Connect with us

Cinemapettai

15 வருடத்திற்கு பிறகு மீண்டும் நேருக்கு நேர் மோதும் கமல், ரஜினி.. அப்போ சூப்பர் ஸ்டார், இப்போ யாருக்கு வெற்றி?

Tamil Cinema News | சினிமா செய்திகள்

15 வருடத்திற்கு பிறகு மீண்டும் நேருக்கு நேர் மோதும் கமல், ரஜினி.. அப்போ சூப்பர் ஸ்டார், இப்போ யாருக்கு வெற்றி?

தமிழ் சினிமாவில் ஒவ்வொரு காலகட்டங்களிலும் இரண்டு நடிகர்கள் முன்னணி நடிகர்களாக வலம் வருவார்கள். இவர்களது இரண்டு படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கும்.

அந்த வகையில் 80 காலகட்டங்களில் இருந்து தற்போது வரை முன்னணி நடிகர்களாக இருப்பவர்கள் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலக நாயகன் கமலஹாசன்.

கடந்த சில வருடங்களாகவே கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் படங்கள் நேருக்கு நேர் மோதிக் கொள்வதை தவிர்த்து கொண்டிருந்த நிலையில் தற்போது மீண்டும் அதற்கான சூழ்நிலை உருவாகியுள்ளது.

கடைசியாக 2005 ஆம் ஆண்டு ஏப்ரல் 14 தமிழ் திருநாளுக்கு கமல் நடிப்பில் மும்பை எக்ஸ்பிரஸ் படமும், ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான சந்திரமுகி படமும் ஒரே நாளில் வெளியானது.

இதில் ரஜினியின் சந்திரமுகி படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்த நிலையில் கமலஹாசனின் மும்பை எக்ஸ்பிரஸ் படம் மண்ணைக் கவ்வியது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் 2021 ஆம் ஆண்டு அதே தேதியில் மீண்டும் கமல் மற்றும் ரஜினி மோத உள்ளனர். இந்த முறை ரஜினியின் அண்ணாத்த படமும், கமலஹாசன்-லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் படமும் ஏப்ரல் 14 வெளியாக முடிவு செய்யப்பட்டுள்ளது.

இருவரும் அரசியலில் களமிறங்க உள்ள நிலையில் இந்த இரண்டு படங்களுக்கும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கும் என்பது மட்டும் உறுதி. இந்த முறை சிறுத்தை சிவாவை விட லோகேஷ் கனகராஜ் படத்திற்கு கொஞ்சம் எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கும் என்கிறது சினிமா வட்டாரம்.

Continue Reading
To Top