கைப்பிடித்து தூக்கிவிட மறுக்கும் ரஜினி, கமல்.. நடுத்தெருவுக்கு வந்த பிரபல தயாரிப்பாளர்

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக உள்ளவர் மணிரத்னம். இவருடைய பெரும்பாலான படங்களை தயாரித்தவர் மணிரத்னத்தின் சகோதரர் ஜீ வெங்கடேஸ்வரன்.
ஜீவி கமல்ஹாசனின் நாயகன், ரஜினிகாந்தின் தளபதி, அக்னி நட்சத்திரம், அஞ்சலி, சொக்கத்தங்கம் போன்ற பல படங்களை தயாரித்துள்ளார்.

ஜீவி கடுமையான நிதிப் பிரச்சனையால் கடந்த 2003ஆம் ஆண்டு மே 3ஆம் தேதி வீட்டிலேயே தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில் சமீபத்தில் ஒரு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தயாரிப்பாளர் கே டி குஞ்சுமோன் கலந்துகொண்டார்.

அவ்விழாவில் பேசும்பொழுது தயாரிப்பாளர்களை யாரும் மதிப்பதும் இல்லை, உதவுவதும் இல்லை என குறிப்பிட்டிருந்தார். அப்போது மணிரத்னம் இயக்கத்தில் 1987 இல் வெளியான திரைப்படம் நாயகன். இப்படத்தில் கமல்ஹாசன், சரண்யா மற்றும் பலர் நடித்திருந்தனர்.

நாயகன் படத்தை முதலில் நான் வினியோகம் செய்ய மாட்டேன் என குஞ்சுமோன் சொல்லியுள்ளார். ஆனால் மணிரத்தினத்தின் அண்ணன் ஜீவி நீங்கள் தான் இதை செய்ய வேண்டும் என வற்புறுத்தியதால் குஞ்சுமோன் நாயகன் படத்தின் விநியோக உரிமையை பெற்றார். ஆனால் அவருக்கு நாயகன் படத்தில் லாபமே இல்லையாம்.

ஜீவி தன்னுடைய இறுதி காலத்தில் பண நெருக்கடியால் பெரும் பிரச்சனையை சந்தித்து உள்ளார். ஆனால் அவருடைய சகோதரர் மணிரத்தினம், நடிகர் ரஜினி, மற்ற நடிகர்கள் என யாரும் உதவ முன்வரவில்லை என அந்த விழாவில் குஞ்சுமோன் குறிப்பிட்டுள்ளார்.

ஒரு திரைப்படம் உருவாக தயாரிப்பாளர் மிக முக்கியம். தயாரிப்பாளர்கள் பல கோடிகளை போட்டு படங்களை தயாரிக்கிறார்கள். அந்தப்படம் லாபம் அடைந்தால் மட்டுமே மீண்டும் படமெடுக்க முடியும். தற்போது முன்னணி நடிகர்களாக இருக்கும் சில நடிகர்கள் தங்களை வளர்த்துவிட்ட தயாரிப்பாளர்கள் பண நெருக்கடியில் உள்ள போது உதவ மறுக்கிறார்கள்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்