News | செய்திகள்
அனைத்து படங்களையும் அடக்கிய பேட்ட,விஸ்வாசம்.. வரலாறை மாற்றிய ரஜினி அஜித்
அனைத்து படங்களையும் ஓரம்கட்டிய பேட்ட,விஸ்வாசம்
தமிழ் சினிமாவில் வெளிவர இருந்த அனைத்து படங்களையும் ஓரங்கட்டி விட்டது பேட்ட விஸ்வாசம். தியேட்டர்காரர்களும் வேற படங்களை வெளிவிட விருமபவில்லை ஏன் என்றால் இந்த ரெண்டு படங்களின் வசூல் இன்னும் குறைந்தபாடில்லை. இன்னும் இரண்டு வாரங்களுக்கு நல்ல தியட்டர்களில் அதிகமாக ஸ்க்ரீன்கள் இல்லை என முடிவெடுத்துவிட்டனர்.
இந்தியாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களும் தமிழ்நாட்டின் சூப்பர் ஸ்டார் அஜித்குமார் அவர்களும் இணைந்து நடித்தது போன்ற மாயை உருவாகிவிட்டது இந்த பொங்கல் படங்கள் பேட்ட, விஸ்வாசம்.
இன்னும் சொல்லப்போனால் நிறைய அஜித் ரசிகர்கள் ரஜினி ரசிகர்கள்தான். அதனால் பேட்ட படத்திற்கு டபுள் வேட்டை. ஆம் அஜித் ரசிகர்களும் பேட்ட படம் பார்த்து மகிழ்ந்தனர். ரஜினி படத்திற்கு போட்டியாக விஸ்வாசம் ரிலீஸ் செய்கிறார்கள் என்றால் படத்தின் மேல் உள்ள நம்பிக்கையும் ரசிகர்களின் மேல் உள்ள நம்பிக்கையும்தான். அதனால அப்படி என்னமோ இருக்கு விஸ்வாசம் படத்தில் என ரஜினி ரசிகர்களும் பார்த்தே மகிழ்ந்தனர்.
விளையாட்டில் கங்குலி முடிந்து தோனி, தோனி முடிந்து கோலி இப்படி வயதுக்கேற்ற ரசிகர்கள் மாறுவது இயல்புதான். ஆனால் சினிமாவில் ரஜினி இன்னும் போட்டி போட்டு வெற்றிபெற்று கொண்டிருப்பதுதான் ரஜினியின் சிறப்பு.
அஜித் ஒரு ரஜினி ரசிகர் இது தெரிந்தும் யாரோ பணத்திற்காக கிளப்பிவிட்ட பிரச்சனைகள் இன்னும் தொடர்கிறது பேட்ட விஸ்வாசம் படத்தில். தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், தியேட்டர்காரர்கள் இவர்களின் மார்க்கெட்டிங் ரசிகர்கள் மீதுதான். ரசிகர்களை வைத்து இவர்கள் கல்லா கட்டுகிறார்கள். தியேட்டர்காரர்கள் ப்ளாக்கில் டிக்கெட் விற்று, கட் அவுட் வைப்பதிலும் பிரச்சனைகளை கிளப்பி விடுகிறார்கள்.
முடிவாக வெளிவந்த இரண்டு படங்களும் நல்லா இருந்ததால் செம மாஸ் ஹிட் ஆனது. இதுதான் இந்த பிரச்சனைக்கும் முடிவும் கூட. படம் நன்றாக இருந்தால் கண்டிப்பா அனைத்து ரசிகர்களும் பார்ப்பார்கள்.
பொதுவாக இரண்டு பெரும் நடிகர்கள் படம் வெளிவந்து ஒன்று வெற்றிபெறும் மற்றது தோல்வி அடையும் ஆனால் உண்மையில் இந்த வரலாற்றை மாற்றி உள்ளனர் ரஜினி அஜித். இரண்டு படங்களும் மாபெரும் வெற்றிதான். சினிமாவிலும் கன்டென்ட் இஸ் கிங்.
Friday January 18 Releases in Chennai – No New Tamil Releases as #Petta & #Viswasam lock screens in its glorious 2 nd week. Other Releases : Hindi 1. #Bombairiya 2. #WhyCheatIndia 3.#FraudSaiyaan English 1. #Glass 2.#Replicas 3.#SecondAct. Malayalam 1. #Mikhael.
— Sreedhar Pillai (@sri50) January 18, 2019
