புதன்கிழமை, பிப்ரவரி 19, 2025

ரஜினி உச்சத்தில் இருக்கும் போது ஏற்பட்ட பரிதாப நிலைமை.. சிவாஜிக்கே பயத்தை காட்டிய சம்பவம்

தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டாராக ஏராளமான ரசிகர்களை பெற்று புகழின் உச்சியில் இருப்பவர் ரஜினிகாந்த். இன்று அவர் இந்த உயரத்தை அடைவதற்கு ஆரம்ப காலத்தில் பல தடைகளையும், சோதனைகளையும் கடந்து வந்திருக்கிறார்.

மேலும் அவர் நடிக்க வந்த புதிதில் ஒரு தனி ஹீரோவாக இல்லாமல் மற்ற நடிகர்களுடன் இணைந்து சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்துவந்தார். அதற்குப் பின்பு அவருடைய கடின உழைப்பினால் இன்று ஒரு சூப்பர் ஸ்டாராக உயர்ந்திருக்கிறார். அந்த சமயத்தில் இவர் நடிகர் சிவாஜியுடன் இணைந்து பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

அவர்கள் இருவரும் இணைந்து நடித்த முதல் திரைப்படம் ஜஸ்டிஸ் கோபிநாத். இந்தத் திரைப்படத்தில் ரஜினி சிவாஜிக்கு மகனாக நடித்திருப்பார். அதில் தொடங்கி படையப்பா வரை அவர்கள் இருவரும் ஏராளமான திரைப்படங்களில் இணைந்து நடித்து இருக்கின்றனர்.

இதனால் அவர்களுக்கு இடையே ஒரு நல்ல நட்பு இருக்கிறது. அதிலும் ரஜினிக்கு சிவாஜியின் மீது மிகப்பெரிய மரியாதை இருக்கிறது. அப்போது ரஜினிகாந்த் பல திரைப்படங்களில் படுபிஸியாக நடித்துக் கொண்டிருந்தார். இப்படி ஓய்வு இல்லாமல் விடாது நடித்துக் கொண்டிருந்த அவருக்கு உடல்ரீதியாகவும் சில பாதிப்புகள் இருந்தது.

அதிலிருந்து விடுபட ரஜினி சில போதை மருந்துகளை உட்கொள்ள ஆரம்பித்தார். அந்த பழக்கத்தின் காரணமாக அவருக்கு சில பக்க விளைவுகளும் ஏற்பட்டது. அதாவது அதிக கோபம், டென்ஷன் போன்ற பல விளைவுகளை அவர் சந்தித்தார். அந்த சமயத்தில் நடிகர் சங்க தலைவராக இருந்த சிவாஜி திரிசூலம் பட வெற்றி விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

மதுரையில் மிகவும் பிரமாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அந்த விழாவில் நடிகர், நடிகைகள் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். அப்போது அந்த விழா மேடையில் சிவாஜி பேசிக்கொண்டிருக்கும் போது அங்கு இருந்த ரஜினி தன்னை மறந்து அங்கும், இங்கும் நடந்தபடியே இருந்திருக்கிறார்.

இதை கவனித்த சிவாஜி ரஜினிக்கு ஏதோ பிரச்சினை இருக்கிறது என்று அறிந்து கொண்டார். சற்று ரஜினியை பார்த்து பயந்து போன சிவாஜி, அருகில் இருந்த உதவியாளரிடம் அவரை கவனியுங்கள் அவருக்கு ஏதோ பிரச்சனை என்று கூறியுள்ளார். பின்னர் விழா முடிந்து திரும்பிக் கொண்டிருக்கும்போது மதுரை விமான நிலையத்திலும் வித்தியாசமாய் நடந்திருக்கிறார் ரஜினி. அவர் சினிமாவில் சண்டை போடுவது போன்று தன்னுடைய பெல்ட்டைக் கழட்டி சுழற்றி கொண்டே இருந்திருக்கிறார்.

இதை கவனித்த பொதுமக்கள் பலரும் அவருக்கு மன ரீதியாக பாதிப்பு இருப்பதாக தங்களுக்குள் பேசிக்கொண்டனர். மேலும் ஒருசில நாளிதழ்களும் ரஜினிக்கு பைத்தியம் பிடித்து விட்டது என்றெல்லாம் செய்திகள் வெளியிட்டனர். இதனால் ரஜினி இனி சினிமாவில் நடிக்க மாட்டார் என்றெல்லாம் கருத்துகள் நிலவியது.

ஆனால் அவருடைய இந்த பிரச்சனையை தெரிந்து கொண்ட சிவாஜி உள்ளிட்ட சிலர் அவருக்கு மருத்துவ சிகிச்சை கொடுக்க ஏற்பாடு செய்தனர். அதன் பிறகு ரஜினி அதிலிருந்து சிறிது சிறிதாக நீண்டு நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்தினார்.

Trending News