Tamil Cinema News | சினிமா செய்திகள்
பயோபிக்காக உருவாக இருக்கும் ரஜினி நடிகையின் வரலாறு…
சூப்பர் ஹிட் படமான படையப்பா மூலம் ரசிகர்களை கவர்ந்த சௌந்தர்யாவின் வாழ்க்கை வரலாற்று படமாக உருவாக இருக்கிறது.

rajinikanth
தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் சௌந்தர்யா. தமிழில் பொன்னுமணி படத்தின் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து, தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். கன்னடா தயாரிப்பாளர் கே.எஸ்.நாராயணனுக்கு மகளாக பிறந்த சௌந்தர்யாவிற்கு, ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் பெரும் புகழ் இருந்தது. 12 வருடங்களில் 120 படத்தில் நடித்திருந்தார்.
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துடன் அருணாச்சலம், படையப்பா ஆகிய திரைப்படங்களில் நடித்துப் புகழ் பெற்றவர். 2004 ஆம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சிக்கு ஆதரவாக பொதுக்கூட்டங்களில் கலந்து கொள்ள விமானத்தில் பயணித்தார். அவர் சென்ற விமானம் திடீரென விபத்துக்குள்ளானது. அதில் இருந்த சௌந்தர்யா இறந்ததாக அறிவிக்கப்பட்டது. ஆனால், அவர் உயிருடன் தான் இருக்கிறார் என சில வதந்திகளும் சில காலம் பரவிக்கொண்டு தான் இருந்தது.
இந்நிலையில் சௌந்தர்யாவின் வாழ்க்கை வரலாறு படமாக எடுக்க போவதாக பிரபல தயாரிப்பாளர் ராஜ்கந்துகுரி அறிவித்துள்ளார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய 4 மொழிகளில் இப்படம் உருவாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது. தெலுங்கு உலகின் அடுத்த சாவித்ரியாக வலம் வந்த சௌந்தர்யாவின் கதாபாத்திரத்தில் முன்னணி நடிகையை நடிக்க வைக்க பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருகிறது. இப்படத்தில் ரஜினிகாந்தாக கூட நடிக்க பிரபல நடிகர்கள் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது.
சமீபத்தி, நடிகர்களுக்கு இடையே ராணியாக திகழ்ந்த சாவித்ரியின் வாழ்க்கை வரலாறு படம் நடிகையர் திலகம் என்ற பெயரில் உருவாகி இருக்கிறது. இதில் சாவித்ரியாக நடித்த கீர்த்தி சுரேஷுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. இதை தொடர்ந்து, எந்த நடிகைக்கு சௌந்தர்யாவின் அவதாரம் சிறப்பை பெற்று தரும் என எதிர்பார்ப்புகள் கிளம்பி இருக்கிறது.
