Tamil Cinema News | சினிமா செய்திகள்
ரஜினிகாந்த் நடிக்கும் அடுத்தடுத்து நான்கு புதிய படம்.. திரும்ப 80’s சூப்பர் ஸ்டாராக மாறினார்
ரஜினிகாந்த் நடிக்கும் அடுத்தடுத்து 4 புதிய படம்
தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களுக்கு போட்டியாக இருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளிவந்த திரைப்படம் எந்திரன் டூ பாயிண்ட் ஓ இந்த படத்தில் பல புதிய வசதிகள் கொண்ட தொழில்நுட்பம் மற்றும் அதன் கலைஞர்களை அறிமுகப்படுத்தினார். படமும் நல்ல வரவேற்பை பெற்றது.
இதற்கு அடுத்ததாக தற்போது ரஜினிகாந்த் ஏ.ஆர்.முருகதாஸ் உடன் கூட்டணி அமைத்து உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம் சர்கார் இப்படம் அரசியல் களத்தை மையமாக கொண்டு அமைக்கப்பட்டது.
இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில். தற்போது அரசியல் களத்தில் இறங்கியுள்ள ரஜினிகாந்தை வைத்து அரசியல் படம் எடுக்கப் போவதாக தகவல்கள் தெரிவிக்கிறது.
ரஜினிகாந்த் தற்போது முழுவீச்சில் அரசியலில் ஈடுபட்டு வருகிறார். அது ஒரு பக்கம் இருக்க மற்றொரு பக்கம் பல இயக்குனர்களுடன் படங்களில் நடித்து வருகிறார். ஏஆர் முருகதாசுக்கு பிறகு கேஎஸ் ரவிக்குமாரும் ஒரு படம் நடிக்க உள்ளதாகவும். எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் ஒரு படம் நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ரஜினிகாந்த் தன் 2 கண்களைப் போல இரண்டு பக்கமும் வேலையை செய்து வருகிறார். இதனால் இவரது ரசிகர்கள் எந்த பக்கம் இவர் வெற்றி காண்பது என எதிர்பார்த்து வருகின்றனர். வரும் பொங்கலுக்கு பேட்ட படம் ரிலீஸ் ஆவதால் இப்படத்தை ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து வருகின்றனர்.
