endhiran-2-0 teaser
2.0

ரஜினி – ஷங்கர் கூட்டணியில் மிகபிரமாண்டமாக உருவாகி வரும் படம் 2.0. எந்திரன் படத்தின் தொடர்ச்சியாக உருவாகி வரும் இந்த படத்தின் ஷூட்டிங் முடிந்து பரபரப்பாக கிராபிக்ஸ் வேலைகள் நடந்து வருகின்றன. ஷூட்டிங்கை விட போஸ்ட் புரடக்‌ஷன் வேலைகளே அதிகம் இருப்பதால், அதற்காக நேரம் செலவிடப்பட்டு வருகிறது. லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தில் அக்‌ஷய் குமார், சுதான்ஷூ படேல், எமி ஜாக்சன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

rajini 2.0

450 கோடி ரூபாய் என்ற மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகி வரும்2.0 படமே இன்றைய தேதியில் ஆசியாவின் பெரிய பட்ஜெட் படம் என்று கருதப்படுகிறது. படத்தின் ஆடியோ லாஞ்ச் கடந்த அக்டோபரில் மிக பிரமாண்டமாக வெளியிடப்பட்டது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் இரண்டு பாடல்கள் உலகின் மிக உயரமான கட்டடமான புர்ஜ் கலிஃபாவில் வைத்து வெளியிடப்பட்டது.

அதிகம் படித்தவை:  சபாஷ் நாயுடு படத்தினால் இந்தியன் 2 படத்திற்கு ஏற்பட்ட திடீர் பிரச்சனை.!

இதற்காக ரஜினி, ஏ.ஆர்.ரஹ்மான், அக்‌ஷய் குமார் உள்ளிட்டோர் ஹெலிகாப்டரில் என்ட்ரி கொடுக்கும் வகையில் இசை வெளியீட்டு விழாவை படக்குழு திட்டமிட்டிருந்தது. இந்த படம் கடந்த ஆண்டு தீபாவளிக்கே வெளியிடப்படும் என்று கூறப்பட்ட நிலையில், கிராபிக்ஸ் வேலைகளால் இந்தாண்டு ஜனவரி மற்றும் ஏப்ரல் என தள்ளிப்போனது. இன்னும் வேலைகள் முடியாததால், இந்தாண்டு இறுதிக்குள் படத்தை ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டு வேலைகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

அதிகம் படித்தவை:  மகாநடி படத்தால் முக்கிய முடிவு எடுத்த ஜெமினியின் மகள்..!
2.0

டீசர் என்கிற பெயரில் படத்தின் முக்கியமான காட்சிகள் சில, சமீபத்தில் இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தநிலையில், படத்தின் அதிகாரபூர்வ டீசரை ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியின் போது வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதனால், ரஜினி ரசிகர்கள் ஏகத்துக்கும் கொண்டாட்ட மனநிலையில் இருக்கின்றனர்.