2.0
2.0

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் காலா படத்தை தொடர்ந்து தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் பேட்ட படத்தில் நடித்து வருகிறார், சமீபத்தில் வெளியாகிய இந்தப் படத்தின் மோஷன் போஸ்டர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

2.0
2.0

மேலும் சூப்பர் ஸ்டார் ரஜினி ஷங்கர் இயக்கத்தில் 2.0 என்ற படத்தில் நடித்துள்ளார், இந்த படத்தின் டீசர் இன்று காலை 9 மணியளவில் ரிலீஸ் ஆனது,டீசர் ரிலீஸ் ஆகி பட்டித்தொட்டியெல்லாம் பட்டையை கிளப்பி வருகிறது.

நீண்ட நாட்களுக்கு பிறகு டீசர் வெளிவந்ததால் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் இருக்கிறார்கள் மேலும் இந்த டீசர் வெளிவந்து நான்கு மணி நேரத்தில் தமிழில் 2.6 மில்லியன் பார்வைகளை கடந்தது சாதனை படைத்தது. அதேபோல் தெலுங்கு மற்றும் ஹிந்தியிலும் ரிலீஸானது தெலுங்கில் 1.8 மில்லியன் பார்வையாளர்களையும், ஹிந்தியில் 1.9 மில்லியன் பார்வையாளர்களையும் கடந்தது சாதனை படைத்துள்ளது.

இது மட்டும் இல்லாமல் இந்த டீசர் நான்கு மணிநேரத்தில் தமிழில் 2.4 லட்சம் லைக்குகளை கடந்து சாதனை படைத்துள்ளது அதேபோல் தெலுங்கு மற்றும் இந்தியிலும் ஒரு லட்சத்திற்கும் மேல் லைக்குகளை  பெற்ற அசத்தியுள்ளது.