fbpx
Connect with us

Cinemapettai

எமியுடன் ரஜினி டூயட் – 2.O ஷூட்டிங்கிலிருந்து லீக்கானது

rajini-2-0

எமியுடன் ரஜினி டூயட் – 2.O ஷூட்டிங்கிலிருந்து லீக்கானது

இயக்குனர் ஷங்கர் படத்தின் கதையும், ஷூட்டிங் ஸ்பாட்டும் படம் வெளிவரும்வரை மிகமிக ரகசியமாக இருக்கும். படப்பிடிப்பு தளத்திற்குள் யாரும் செல்போன் பயன்படுத்தக்கூடாது.

படப்பிடிப்பு குழுவினர் தவிர வேறு உள்ளே வரக்கூடாது என்று பல கட்டுப்பாடுகள் இருக்கும். தனியார் பாதுகாப்பு பவுன்சர்கள் படப்பிடிப்பை சுற்றி நிறுத்தப்பட்டிருப்பார்கள்.

ஆனால் கடந்த சில தினங்களுக்கு முன்பு திருக்கழுக்குன்றத்தில் நடக்கும் படப்பிடிப்பிற்கு ரஜினி சென்ற படங்கள் இணையதளங்களில் வெளியானது. அது ரசிகர்களால் செல்போனில் எடுக்கப்பட்டது.

தற்போது பாடல் காட்சி படமாக்குப்படும் ஷூட்டிங் ஸ்பாட் படம் வெளிவந்துள்ளது. திருக்கழுக்குன்றம் மலைக்குள் இயற்கையுடன் இணைந்து செயற்கையாக அமைக்கப்பட்ட பசுமை பின்னணியில் ரஜினி வெள்ளை உடையிலும் எமி ஜாக்சன் வெள்ளை கவுனிலும் தோன்றுகிறார்கள்.

அதனை டிராலி உதவி கொண்டு 4 ஹாலிவுட் கலைஞர்கள் படமாக்குகிறார்கள். இந்த படம் வெளிவந்ததால் ‛2.O படக் குழுவினர் அதிர்ச்சியில் இருக்கிறார்கள். இந்தப் படம் யார் எடுத்தது? எப்படி வெளியில் வந்தது? என்பதை தீவிரமாக விசாரிக்குமாறு ஷங்கர் தனது உதவியாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளாராம்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top