Tamil Cinema News | சினிமா செய்திகள்
சாதனை! சாதனை! ரஜினியால் மட்டுமே முடியும்! மிரண்ட பாலிவுட்
ரஜினியின் சாதனையை தமிழகத்தில் மட்டும் கணக்கில் எடுத்துக்கொள்ள கூடாது அவர் சாதனையை இந்தியா முழுவதும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும், அவர் அதைத் தாண்டிதான் போவார். இது அங்கு உள்ள சூப்பர் ஸ்டார் ஷாருக்கான், சல்மான் கான், அமிதாப் பச்சன் அவர்களுகே தெரியும். பாலிவுட் நடிகர்கள் நம்ம ஊரைப் பார்த்து வியந்து போக நம்ம ஊரில் நிறைய பேர் இருக்கிறார்கள் அதில் ரஜினியும் முக்கியமான ஒருவர்.

2.0
தற்போது வெளியான 2.0 படத்தின் தமிழ், தெலுங்கு, இந்தி போன்ற மொழிகளில் அதன் டீசர் வெளிவந்தது. 2டி 3டி யில் வெளிவந்த 2.0 டீசர் தமிழ், தெலுங்கு, இந்தி என அனைத்து மொழிகளிலும் மில்லியன் கணக்கான பார்வையாளர்களைக் கடந்தது.
அதுவும் 2.0 படத்தின் டீசர் வெளிவந்து தொடர்ந்து ஐந்து நாட்களாக முதல் இடத்தில் உள்ளது. இந்த சாதனையை வேறு எந்த படமும் எடுக்கவில்லை. மேலும் தமிழில் மட்டும் 5 லட்சம் லைக்குகளை வாங்கி இன்னும் போய்கொண்டிருகிறது. 68 வயதிலும் ரஜினியின் சாதனை தொடர்வது பெரும் ஆச்சரியமாக உள்ளது, பாலிவுட் நடிகர்களும் வியந்து போகிறார்கள்.
