Tamil Cinema News | சினிமா செய்திகள்
ரஜினியின் 2.0 சாதனை இருக்கட்டும் பாஸ்.! விஜய்யின் இந்த சாதனையை பார்த்தீர்களா.!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் காலா படத்தை தொடர்ந்து தற்பொழுது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் பேட்ட படத்தில் நடித்து வருகிறார், இந்தப் படத்தின் மோஷன் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து முடித்த 2.0 திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல எதிர்பார்ப்பு நிலவி வருகிறது தற்போது வெளிவந்து டீசர் மிக பிரம்மாண்டமாக இருந்தாலும் விஜய்யின் மெர்சல் சாதனை நெருங்கவே முடியவில்லை என சில விமர்சனங்கள் எழுந்து வருகிறது.
ரஜினியின் 2.0 திரைப்படத்தின் டீசர் ஒரு லட்சம் like கடக்க 37 நிமிடம் ஆனது ஆனால் மெர்சல் திரைப்படம் இந்த லைக் கிடைக்க வெறும் பத்தே நிமிடம் தான் ஆனது, ரஜினியின் 0 டீசர் மூன்று மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியானது 24 மணி நேரத்தில் யூடியூப் தளத்தில் மொத்தமாக 24.8 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்துள்ளது.
இந்த சாதனை எல்லாம் ஒருபுறம் இருக்க மெர்சல் டீசர் தற்போது 40 மில்லியன் பார்வைகளை கடந்து மேலும் சாதனை படைத்துள்ளது இதை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள், இந்த சாதனையை ரஜினியின் 2.0 தமிழ் டீசர் தொடுமா என்பது சந்தேகம் எழுந்துள்ளது
