ரஜினி – ஷங்கர் கூட்டணியில் வெளிவரும் 2.0 படத்தின் விளம்பர வேலைகள் தொடங்கிவிட்டன. இன்று  இசைவெளியீடு என்பதால் அனுதினமும் படத்தின் புதிய போஸ்டர்கள் வெளியிடப்படுகின்றன.

2.O (எந்திரன் படத்தின் 2-ம் பாகம்) படத்தை லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துவருகிறது. பட்ஜெட் – ரூ. 400 கோடி. ரஜினிக்கு இணையான கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் நடிக்கிறார்.

rajini 2.0

கதாநாயகி – ஏமி ஜாக்சன். ஏ.ஆர். ரஹ்மான் இசை அமைத்துள்ளார். வசனம் – ஜெயமோகன். ஒளிப்பதிவாளராக நீரவ் ஷா-வும் முத்துராஜ் கலை இயக்குநராகவும் படத் தொகுப்பாளராக ஆண்டனியும் ஒலி வடிவமைப்பாளராக ஆஸ்கர் விருது பெற்ற ரசூல் பூக்குட்டியும் பணியாற்றுகிறார்கள்.

3டி தொழில்நுட்பத்தில் 2.0 படம் உருவாகிவருவதால் இதன் கிராபிக்ஸ் பணிகள் அமெரிக்காவில் தற்போது நடைபெற்று வருகின்றன. 2.0, ஜனவரி மாதம் 25 அன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று துபையில் 2.0 பாடல்கள் வெளியிடப்படவுள்ளன. ரஜினி, ஷங்கர், ஏ.ஆர். ரஹ்மான் உள்ளிட்ட படக்குழுவினர் இந்த விழாவில் கலந்துகொள்ளவுள்ளார்கள்.

இயக்குநர் ஷங்கரின் ட்விட்டர் பக்கத்தில் மூன்று புதிய போஸ்டர்கள் வெளியிடப்பட்டுள்ளன. நாளை இசை வெளியீடு என்பதால் மேலும் ஒரு போஸ்டர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.