fbpx
Connect with us

தள்ளி தள்ளி போகும் 2.0.! தவித்துப் போகும் ரசிகர்கள்.! என்ன காரணம்.!

News | செய்திகள்

தள்ளி தள்ளி போகும் 2.0.! தவித்துப் போகும் ரசிகர்கள்.! என்ன காரணம்.!

ரஜினியின் `2.0′ படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போகிறது. இதனால், ரசிகர்கள் தவித்துப் போயிருக்கிறார்கள்.

2.0

இந்திய திரை உலகிலேயே மிகப் பிரமண்டமான முறையில் உருவாகும் `2.0′ திரைப்படத்தை ரூ.400 கோடி செலவில் தயாரித்து வருகிறது லைகா புரொடக்‌ஷன்ஸ்.

எந்திரன் படத்தின் இரண்டாம் பாகமான இப்படத்தை, பிரமாண்டத்தின் பிராண்ட் அம்பாசிடர் என வர்ணிக்கப்படும் ஷங்கர் இயக்குகிறார்.

இதில், சூப்பர்ஸ்டார் ரஜினி, பிரபல இந்தி நட்சத்திரம் அக்‌ஷய் குமார், தமிழ் ரசிகர்களின் லேட்டஸ்ட் ட்ரீம் கேர்ள் எமி ஜாக்சன் ஆகியோர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

rajini2.0

சமீபத்தில் துபாயில் நடந்த ஆடியோ ரிலீஸ் விழாவில் மதன் கார்கி எழுதிய ‘எந்திர லோகத்து சுந்தரியே..’ மற்றும் ‘ராஜாளி… நீ காலி..!’ என இரு பாடல்கள் வெளியிடப்பட்டது.

இந்தப் பாடல் களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. இந்நிலையில், நா.முத்துகுமார் எழுதிய ‘புள்ளினங்காள்…’ என்கிற மூன்றாவது பாடலை விரிவில் வெளியிட உள்ளனர்.

இதனால் படத்துக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது. படம் திரைக்கு வரும் நாளுக்காக ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு காத்திருக்கின்றனர்.

rajini 2.0

ரசிகர்களின் ஏக்கத்தை புரிந்து `2.0′ படத்தை வரும் ஜனவரி 25-ஆம் தேதி ரிலீஸ் செய்ய படக்குழு முடிவு செய்தது.ஆனால், தற்போது படம் ஜனவரி 25-ஆம் தேதி ரிலீஸ் ஆக வாய்ப்பில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.

2.0′ படத்தில் கிராபிக்ஸ் காட்சிகள் அதிகம் இருப்பதால் அதற்கென நிறைய மெனக்கிட வேண்டியுள்ளதால்; படத்தை முடிப்பதில் காலதாமதமாகும் என திட்டவட்டமாக சொல்லிவிட்டதாம் டெக்னிக்கல் டீம்.

ஆகவே, படத்தை வருகிற ஏப்ரல் தமிழ் புத்தாண்டில் ரிலீஸ் செய்ய படக்குழு முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

rajini2.0

இதனால் டீசர் மற்றும் ட்ரைலர் கூட தாமதமாகவே ரிலீஸ் செய்யப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

`2.0′ படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போவதால், ரஜினி ரசிகர்கள் தவித்துப் போயிருக்கிறார்கள்!இதற்கிடையே; தனுஷ் தயாரிப்பில், ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் காலா படத்தின் போஸ்ட் புரடக்சன்ஸ் வேலைகள் விறுவிறு வென நடந்து வரும் நிலையில், ‘2.0’ படத்தின் ரிலீஸ் தள்ளிப்போவதால் அந்தப் படக்குழுவுக்கு குழப்பம் ஏற்பட்டுள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top