ஏன் தாமதமாகிறது 2.ஓ… லீக்கான தகவல்கள்

ஏன் தாமதமாகிறது 2.ஓ…

ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் 2.ஓ படத்தின் வெளியீடு தொடர்ந்து தள்ளிப்போய் வருவதற்கான காரணம் குறித்த முக்கிய தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

2.0

பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரும் – சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தும் இணைந்து அதிக பொருட் செலவில் உருவாக்கி இருக்கும் படம் 2.0. மாஸ் ஹிட் அடித்த எந்திரன் படத்தின் தொடர்ச்சியாக உருவாகி வரும் இந்த படத்தின் ஷூட்டிங் முடிந்து பரபரப்பாக கிராபிக்ஸ் வேலைகள் நடந்து வருகின்றன. லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தில் அக்‌ஷய் குமார், சுதான்ஷூ படேல், எமி ஜாக்சன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஷூட்டிங்கை விட போஸ்ட் புரடக்‌ஷன் வேலைகளே அதிகம் இருப்பதால், அதற்காக நேரம் செலவிடப்பட்டு வருகிறது. லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தில் அக்‌ஷய் குமார், சுதான்ஷூ படேல், எமி ஜாக்சன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 450 கோடி ரூபாய் என்ற மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகி வரும்2.0 படமே இன்றைய தேதியில் ஆசியாவின் பெரிய பட்ஜெட் படம் என்று கருதப்படுகிறது.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகி இருக்கும் இசை வெளியீடு உலகின் மிக உயரமான கட்டடமான புர்ஜ் கலிஃபாவில் வைத்து வெளியிடப்பட்டது. இந்த படம் கடந்த ஆண்டு தீபாவளிக்கே வெளியிடப்படும் என்று கூறப்பட்ட நிலையில், கிராபிக்ஸ் வேலைகளால் இந்தாண்டு ஜனவரி மற்றும் ஏப்ரல் என தள்ளிப்போனது. டீசர் என்கிற பெயரில் படத்தின் முக்கியமான காட்சிகள் சில, சமீபத்தில் இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

2.0 making

இந்நிலையில், 2.ஓ படம் இந்த வருடத்திற்குள் வெளியாக வாய்ப்பில்லை என்றே கூறப்படுகிறது. இதனால், அடுத்த வருட ஜனவரியில் படம் வெளிவரும் என கோலிவுட் வட்டாரத்தில் கிசுகிசுப்புகள் நிலவுகிறது. தொடர்ந்து, கிராபிக்ஸ் பணியை செய்து வரும் லண்டன் கம்பெனி ஒரு வழக்கில் சிக்கி உள்ளதாம். இதனால், அந்நிறுவனத்துக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. இந்த பிரச்சனையாலும் 2.ஓ தள்ளிப்போய் இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

Comments

comments