ரூ 400 கோடி செலவில் ரஜினி நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ‘2.O’. இதில் ரஜினிக்கு ஜோடியாக எமி ஜாக்சன் நடித்து வருகிறார். அக்ஷய் குமார் வில்லன் வேடத்தில் நடித்துள்ளார். இப்படத்தை பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கி வருகிறார். லைகா நிறுவனம் அதிக பொருட்செலவில் இப்படத்தை தயாரித்துள்ளது.

இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதுவரை தமிழில் எந்தப் படத்திற்கும் இல்லாத உலக அளவில் விளம்பரங்கள் செய்யப்பட்டு வருகிறது

இந்நிலையில், இப்படத்தின் சிறு முன்னோட்டத்தை இன்று மாலை 6 மணியளவில் வெளியிட இருப்பதாக இயக்குநர் ஷங்கர் அறிவித்திருக்கிறார். இதுவரை நாங்கள் என்ன செய்திருக்கிறோம் என்பதைக் காட்டும் சில காட்சிகளை வெளியிடவிருக்கிறோம் என்று அவர் அறிவித்திருந்தார்.அதேபோல் 6 மணியளவில் வந்த்த்துடுச்சு.

இது ரஜினி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஷங்கர் அறிவித்த சில மணி நேரங்களில் இந்திய அளவில் ட்ரெண்டிங் ஆனது #2Point0 ஹேஷ்டேக்.