மீனாவை பார்த்து பாண்டியன் குடும்பத்தை அடக்கியாலும் ராஜி.. நொந்துபோன தங்கமயில், பதிலடி கொடுக்கும் மாமியார்

Pandian Stores 2 Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், யார் என்ன சொன்னாலும் நான் நினைத்ததில் பிடிவாதமாக இருப்பேன் என்று ராஜி டியூஷன் எடுப்பதற்கு ஒவ்வொருவரிடமும் சம்மதம் வாங்குவதற்கு பிளான் பண்ணி விட்டார். அந்த வகையில் முதல் விக்கெட்டாக கதிரை கவுத்து விட்டார். அதாவது கதிர் கஷ்டப்பட்டு வேலைக்கு போயிட்டு சம்பாதித்த பணத்தை ராஜிக்கு கொடுக்கிறார்.

அதை பார்த்து ராஜி ஆவேசப்பட்டு நான் என்ன உங்க பணத்துக்காகவா இங்கே இருக்கிறேன். எனக்காக நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்து கொடுப்பீங்க நான் அதை வெக்கமே இல்லாமல் வாங்கி செலவு பண்ணனுமா? எனக்கு சூடு சொரணை இருக்காதா? உங்களுக்கு எப்படி வீம்பு இருக்கிறதோ அதே மாதிரி எனக்கும் இருக்கிறது நான் இப்பொழுதே எல்லா விஷயத்தையும் என்னுடைய அப்பா அம்மாவிடம் சொல்லி புரிய வைக்கிறேன் என்று கிளம்பி பிரச்சினை பண்ணினார்.

கோபப்பட்ட தங்கமயில், பிரச்சினைக்கு ஐடியா கொடுத்த பாக்கியம்

ஆனால் இந்த விஷயம் குடும்பத்தில் இருப்பவர்களுக்கு தெரிந்து விட்டால் தேவையில்லாத பிரச்சினை வந்து விடும் என்ற பயத்தினால் கதிர், ராஜியை சமரசம் செய்து விட்டார். அதற்கு ராஜி போட்ட கண்டிஷன் என்னவென்றால் நான் எந்த உண்மையையும் யாரிடமும் சொல்லாமல் இருக்க வேண்டும் என்றால் நான் டியூஷன் எடுப்பதற்கு நீங்கள் சம்மதம் கொடுக்க வேண்டும் என்று சத்தியம் கேட்கிறார்.

கதிருக்கு வேறு வழியில்லாததால் ராஜி கிட்ட டியூஷன் எடுப்பதற்கு பெர்மிஷன் கொடுத்து சத்தியத்தை பண்ணி விட்டார். அடுத்தபடியாக மாமியாரை தன் வழிக்கு கொண்டு வர வேண்டும் என்று கோமதியை லெப்ட் அண்ட் ரைட் வாங்கி ராஜி நினைத்தபடி டியூஷன் எடுப்பதற்கு சம்மதத்தை கொடுத்து விட்டார். அதே மாதிரி பாண்டியனிடமும் பேசி நீங்கள் தான் எனக்கு சம்மதத்தை வாங்கி கொடுக்க வேண்டும் என்று கோமதி தலையில் பெரிய பாரத்தை போட்டு விட்டார்.

கோமதியும் சரி என்று சொல்லி நிலையில் நேரம் பார்த்து பாண்டியனிடம் பேசி சம்மதத்தை வாங்க வேண்டும் என்று பிளான் பண்ணி விட்டார். எப்படி மீனா ஒவ்வொருவரையும் கவிழ்த்து கோபத்தை நீக்கினாரோ, அதே மாதிரி ராஜி அவருக்கு தேவையான விஷயத்தில் சாதித்துக் குடும்பத்தில் இருப்பவர்களை தன் பக்கம் இழுத்துக் கொண்டார்.

இன்னொரு பக்கம் தங்கமயில் வரும்போதெல்லாம் மூன்று பேர் மட்டும் ஏதோ சீக்ரெட் பேசுகிறார்கள். நாம் போனதும் நிறுத்தி விடுகிறார்கள் நம்மளை இன்னும் இந்த குடும்பத்தில் இருப்பவர்களாக நினைக்கவில்லை. ஒதுக்கிறார்கள் என்று ஃபீல் பண்ணி சரவணன் இடம் பேசுவதற்கு போகிறார். ஆனால் சரவணன், கதிர் வாங்கின கடனை எப்படி அடைக்க வேண்டும் என்பதை டென்ஷன் உடன் நினைத்துக் கொண்டு ஒவ்வொரு இடமும் பணத்தை கேட்டுக் கொண்டிருக்கிறார்.

அதனால் தங்கமயில் புழம்பியதை சரவணன் கண்டு கொள்ளவில்லை. அத்துடன் சரவணன் சம்பளம் வந்துவிட்டது என பாண்டியனிடம் பணத்தை கொடுக்கிறார். இதைப் பார்த்த தங்கமயில், பணத்துக்காக தவிக்கிறார் என்று சொன்ன இவருக்கு சம்பளம் வந்துவிட்டது என்று கூட சொல்ல மனமில்லாமல் போய்விட்டது என்று புலம்பிக் கொள்கிறார்.

பிறகு இங்கே நடந்த விஷயத்தை எல்லாம் பாக்கியத்திடம் தங்கமயில் ஒன்று விடாமல் ஒப்பிக்க போகிறார். அதன்படி பாக்கியம் ஒவ்வொருவருக்கும் பதிலடி கொடுக்கும் விதமாக குடும்பத்தில் இருக்கும் ஒற்றுமையை கலைத்து உன் புருஷனை கைக்குள் போட்டுக்கோ என்று தங்கமயிலுக்கு ஐடியா கொடுக்கப் போகிறார். அம்மா சொல்வது சரியாகத்தான் இருக்கும் என்று தங்கமயிலும் இனி தகரமயிலாக ஒவ்வொரு காரியத்தையும் அவருக்கேற்ற மாதிரி சாதித்துக் காட்ட போகிறார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடந்த சம்பவங்கள்

- Advertisement -spot_img

Trending News