fbpx
Connect with us

Cinemapettai

வைகோ தன்னை மறந்து ஒரு உண்மை பேசி இருக்காரு.. ராஜேந்திர பாலாஜி

Politics | அரசியல்

வைகோ தன்னை மறந்து ஒரு உண்மை பேசி இருக்காரு.. ராஜேந்திர பாலாஜி

விருதுநகர் அருகே உள்ள ஆமத்தூரில் கால்நடை பராமரிப்புத்துறையின் மூலமாக புதிதாக கட்டிமுடிக்கப்பட்டுள்ள 23 லட்சம் மதிப்பிலான அரசு கால்நடை மருந்துவமணையை தமிழக பால்வளத்துறை அமைச்சர் கே.டி.இராஜேந்திரபாலாஜி திறந்து வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ராஜேந்திரபாலாஜி,
“வேலூர் பாராளுமன்ற தேர்தலில் திமுகவின் ஆணவம் திமிரு காரணத்ததால் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் திமுக வெற்றி பெற்று உள்ளது . அதிமுகவில் இரட்டை தலைமையினால் தான் வேலூரில் நடைபெற்ற தேர்தலில் தோல்வி என்பது தவறான கருத்து .

இஸ்லாமியர் மற்றும் கிறிஸ்தவர் களின் நலனுக்காக எந்த நலனும் செய்யாத கட்சி திமுக . அவர்களுக்கு தேவையான உதவிகளை அதிமுக செய்வதால் சிறுபான்மையர்களின் வாக்குகள் அதிமுகவுக்கு மீண்டும் கிடைக்க தொடங்கி உள்ளது. வேலூர் நாடாளுமன்ற தேர்தலின் போது திமுக மதம் மற்றும் இனப்பிரச்சனையை தூண்டி விட்டு தான் வெற்றி பெற்றது.

திமுக அழிவை நோக்கி சென்று கொண்டு உள்ளது. அதிமுக வளர்ச்சியை நோக்கி செல்கிறது என்பது வேலூர் தேர்தல் முடிவு பிரதிபலிக்கிறது. வேலூர் தேர்தல் முடிவு உள்ளாட்சி தேர்தலை பாதிக்காது. விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் அனைத்து இடங்களிலும் அதிமுக வெற்றி பெறும் .

வைகோவை யாரலும் பின்னால் இருந்து இயக்க முடியாது இலங்கையில் ஈழத்தமிழர் விவகாரத்தில் காங்கிரஸ் செய்த துரோகத்தை பொறுத்துக் கொள்ள முடியாமல் வைகோ சில நேரங்களில் தன்னை மறந்து உண்மையை பேசி வருகிறார் .

வைகோவின் கட்சிக்கு அதிமுக ஆதரவு தரவில்லை. வைகோ என்ற தனிமனித கருத்திற்கு அதிமுக ஆதரவு உண்டு. எப்போதும் வைகோவிற்கு அதிமுக தொணடர்கள் மத்தியில் தனி மதிப்பு உண்டு. இலங்கை தமிழர்களுக்காக முதன் முறையாக நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்தவர் தான் வைகோ.

சீமான் கூற்றுப்படி தேர்தலில் பணம் தான் வெற்றியை தீர்மாணிக்கும் என்றால் மோடி பிரதமராக இருக்க முடியாது. அம்பானி அதானி டாடா பிர்லா போன்ற இந்தியாவின் பெரும் பணக்காரர்கள் தான் பதவிக்கு வரமுடியும் என்றார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top