ஐபில் திருவிழா துவங்க 2 மாதங்களே உள்ளது. மேலும் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் இரண்டு ஆண்டு தடை முடிந்து மீண்டும் களம் இறங்குகின்றனர். எனவே ஐபில் ஜோர் இன்னும் அதிகரித்துள்ளது.

ipl

ராஜஸ்தான் ராயல்ஸ்

ஐபில் தொடங்கிய 2008 ஆம் ஆண்டு ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு தலைமை தாங்கி, கோப்பையை வென்று கொடுத்தவர் ஷேன் வார்னே. அதன் பின் அந்த அணி நல்ல வளர்ச்சி அடைந்துள்ளது.

அதிகம் படித்தவை:  இந்த அழகான நடிகையை கல்யாணம் செய்யப் போகும் பிரபல கிரிக்கெட் வீரர் யார் தெரியுமா?
RR

இந்த ஆண்டு ஏலம் ஆரம்பிக்கும் முன்னரே ஆஸி கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்(12.5 கோடி) அவர்களை தக்க வைத்தது இந்த அணியின் நிர்வாகம். மேலும் சில நாட்களுக்கு முன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஆலோசகராக (மென்டர்) ஷேன் வார்னே நியமிக்கப்பட்டுள்ளார்.

அதிகம் படித்தவை:  சிஎஸ்கே வின் தீவர ரசிகர் தன் திருமண பத்திரகையில் செய்த புதுமை ! இணையத்தில் ட்ரெண்டிங்
shane warn

எனினும் ஏலத்தில் ரஹானே, ஸ்டோக்ஸ் போன்றவர்களையும் எடுத்தனர். இந்த மூவரில் ஒருவருக்கு தான் அணியின் தலைமை பொறுப்பு என்று நினைத்து வந்த வேலையில், நேற்று ஸ்மித் அவர்களை தலைவராக நியமித்துள்ளார்.

RR

இதற்க்கு முன்பே 2015 இல் ஸ்மித் அணியின் கேப்டனாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.