Connect with us
Cinemapettai

Cinemapettai

10 வருடம் கழித்து தமிழில் டப் செய்யப்படும் ராஜமௌலி குடும்பத்து படம்.. எதிர்பார்ப்பைக் கிளப்பும் படம்!

rajamouli-cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

10 வருடம் கழித்து தமிழில் டப் செய்யப்படும் ராஜமௌலி குடும்பத்து படம்.. எதிர்பார்ப்பைக் கிளப்பும் படம்!

இந்திய சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனராக வலம் வரும் ராஜமவுலியின் வெற்றிக்கு உண்மையான சொந்தக்காரர் என்றால் அவரது அப்பா விஜயேந்திர பிரசாத் என்பவர் தான். அவரது கதைகளையே ராஜமௌலி படமாக்கி வருகிறார்.

அப்பேர்ப்பட்ட விஜயேந்திர பிரசாத் பத்து வருடங்களுக்கு முன்பு இயக்கிய தெலுங்குப் படம் ஒன்று தமிழில் டப்பாக உள்ளது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

2011 ஆம் ஆண்டு ராஜமௌலியின் தந்தை விஜயேந்திர பிரசாத் இயக்கத்தில் உருவான திரைப்படம் ராஜசிங்கம். பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா மற்றும் சினேகா ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள இந்தப் படம் அப்போதைய பாகுபலி என கொண்டாடப்பட்டது.

சரித்திர பட வரிசையில் வெளியாகி வெற்றியை பெற்ற பாகுபலி, சைரா நரசிம்ம ரெட்டி போன்ற படங்களை போலவே பெரிய வெற்றியைப் பெற்ற படம் தான் ராஜசிங்கம். இந்த படத்தை தற்போது தமிழில் டப் செய்து தியேட்டர்களில் வெளியிட முடிவு செய்துள்ளார்களாம்.

rajasingam-cinemapettai

rajasingam-cinemapettai

பல விருதுகளை வாங்கிக் குவித்த ராஜசிங்கம் படத்தின் தமிழக உரிமையை லட்சுமி மூவி மேக்கர்ஸ் சார்பில் எம்ஜிஆர் பிரசாத் என்பவர் வெளியிட உள்ளார். சமீபகாலமாக தெலுங்கு படங்களை தமிழில் டப் செய்து வெளியிடுவது அதிகமாகி வருகிறது.

டிவி சேனல்கள் அதற்கு போட்டி போட்டுக் கொண்டிருக்கும் நிலையில் தியேட்டர்காரர்களும் பழைய தெலுங்கு படங்களை தமிழில் டப் செய்து வெளியிட ஆர்வம் காட்டி வருகின்றனர்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top