Entertainment | பொழுதுபோக்கு
வள்ளி சீரியல் ராஜசேகரன் இயக்கிய 6 படங்கள்.. அதிலும் மூன்று சூப்பர் டூப்பர் ஹிட்
சன் டிவியில் ஒளிபரப்பான வள்ளி சீரியலில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்த ராஜசேகர் ஒருகாலத்தில் இயக்குனராக பல படங்கள் இயக்கியுள்ளார். அதன்பிறகு படங்களை இயக்குவதற்கான சரியான படவாய்ப்புகள் அமையாததால் நடிகராக உருவானார். இவர் என்னென்ன படங்களை இயக்கி உள்ளார் என்பதை பற்றி பார்ப்போம்.
பாலைவன சோலை

palaivana solai
1981ஆம் ஆண்டு ராஜசேகர் இயக்கத்தில் வெளியான திரைப்படம் பாலைவன சோலை. இப்படத்தில் சந்திரசேகர் சுகாசினி மற்றும் ஜனகராஜ் போன்ற பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். இப்படம் பெரிய வெற்றியை பதிவு செய்யாவிட்டாலும் ராஜசேகருக்கு முதல் வெற்றியாக பதிவானது.
கல்யாண காலம்

kalyana kalam
1982 ஆம் ஆண்டு சுகாசினி மற்றும் ஜனகராஜ் நடிப்பில் வெளியான திரைப்படம் கல்யாண காலம். இப்படம் காமெடியை மையமாக வைத்து எடுக்கப்பட்டதால் அப்போது ஒரு சில ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.
தூரம் அதிகம் இல்லை

Dhooram Adhighamillai
1983 ஆம் ஆண்டு கார்த்திக் மற்றும் விஜி நடிப்பில் வெளியான திரைப்படம் தூரம் அதிகம் இல்லை. இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று சினிமாவில் ராஜசேகருக்கு தனி இடத்தை கொடுத்தது. அதன்பிறகு கவனிக்க கூடிய அளவிற்கு ஒரு இயக்குனராக உருவானார் ராஜசேகர்
சின்ன பூவே மெல்ல பேசு

chinna poove mella pesu
1987 ஆம் ஆம் ஆண்டு பிரபு மற்றும் ராம்கி வைத்து சின்ன பூவே மெல்ல பேசு என்ற படத்தை ராஜசேகர் இயக்கியிருந்தார். இப்படம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று ரசிகர்களிடம் பாராட்டைப் பெற்றது. அப்போது இந்த காலகட்டத்தில் பிரபு மற்றும் ராம்கி இருவருக்கும் சினிமா மார்க்கெட் அதிகமாக இருந்ததால் இப்படம் மிகவும் எதிர்பார்க்கப்பட்டது.
பறவைகள் பலவிதம்

paravai palavitham
1988 ஆம் ஆண்டு ராம்கி மற்றும் நிரோஷா வைத்து பறவைகள் பலவிதம் படத்தை இயக்கியிருந்தார். வித்தியாசமான கதைக்களத்தை கொண்டிருந்தது. எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறாமல் சற்று சரிவை சந்தித்தது.
மனசுக்குள் மத்தாப்பு

manasukkul mathapoo
1988 ஆம் ஆண்டு பிரபு மற்றும் சரண்யா நடிப்பில் வெளியான மனசுக்குள் மத்தாப்பு என்ற படத்தை இயக்கியிருந்தார். இப்படம் 100 நாட்களுக்கு மேல் ஓடி ரசிகர்களிடம் வரவேற்பு பெற்று ராஜசேகருக்கு பெயரை பெற்றுக் கொடுத்தது.
ஆனால் ஒரு சில வெற்றிப் படங்கள் கொடுத்தாலும் அதே அளவிற்கு தோல்வி படங்களும் கொடுத்ததால் தொடர்ந்து சினிமாவில் இயக்குனராக வலம் வர முடியாமல் போனார். ராஜசேகர் தற்போது வள்ளி சீரியலில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
