புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

இந்த வேலை நம்ம குடும்பத்துக்கு ஒத்து வராது.. ராஜா ராணியில் அதிர்ந்து போன சந்தியா.!

விஜய் டிவியில் என் கணவன் என் தோழன் என்ற பெயரில் டப் செய்யப்பட்டு ஒளிபரப்பப்பட்ட சீரியல் தற்பொழுது ராஜா ராணி-2 என்ற பெயரில் மீண்டும் நம் பார்வைக்கு வந்துள்ளது. ஆல்ய மானசா மற்றும் சித்து முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

புகுந்த வீட்டில் இருந்து வெளியேற்றப்படும் சந்தியா தன் தோழியின் வீட்டிற்கு செல்கிறார். அவர் செல்லும் பேருந்து விபத்துக்குள்ளாகி அதன் மூலம் சரவணன் சந்தியா ஒன்று சேருகின்றனர். பல நாட்களாக தொடர்ந்த இக்காட்சியை இயக்குனர் ஒரு வழியாக முடித்து வைத்தார்.

தற்பொழுது மளிகை கடைக்கு செல்லும் சந்தியா தன் கணவனுக்கு கிளவுஸ் ஒன்றை வாங்கி கொடுக்கிறார். கடையில் வேலை செய்யும் பொழுது அடிக்கடி சுட்டுக் கொள்வதால் அவருக்கு இது உபயோகப்படும் என்று கூறுகிறார். சரவணனும் அதை மகிழ்ச்சியாக வாங்கிக் கொள்கிறார்.

சந்தியா இப்பொழுது தன்னுடைய ஐபிஎஸ் கனவினை கூறினால் சரவணன் அதை கண்டிப்பாக நிறைவேற்றுவார் என்று நினைக்கிறார். அச்சமயத்தில் கடைக்கு வரும் ஒரு பெண் போலீஸ் நாள் முழுக்க வெயிலில் நிற்பது கஷ்டமாக உள்ளது என்று கூறுகிறார். சந்தியா அவருக்கு தண்ணீர் கொடுக்கிறார்.

அப்பொழுது சரவணன் போலீஸ் வேலை எல்லாம் நம் குடும்பத்திற்கு ஒத்துவராது ரொம்பவும் கஷ்டமான வேலை என்று கூறுகிறார். இந்த பேச்சை கண்டு அதிர்ந்த சந்தியா தன்னுடைய கனவினை கூறாமல் வேறு ஒரு நல்ல சந்தர்ப்பத்தில் கூறிக்கொள்ளலாம் என்று முடிவெடுக்கிறார்.

மளிகை பொருட்கள் உடன் வீட்டிற்கு வரும் சந்தியா தன் மாமியாரிடம் மீதி பணத்தை ஒப்படைக்கிறார். அப்பொழுது மாமியார் பணம் குறைவாக உள்ளது என்று கேட்டதற்கு கிளவுஸ் வாங்கியதை கூறுகிறார். அதை அதைக்கேட்ட மாமியார் மனதிற்குள் மிகவும் மகிழ்கிறார் இப்படியாக இக்கதை நகர்கிறது.

என்னதான் மருமகள் தன் குடும்பத்திற்கு நல்லது செய்தாலும் அதை பாராட்டாமல் இறுக்கமாக இருக்கும் மாமியார் கதாபாத்திரம் சற்று எரிச்சலூட்ட தான் செய்கிறது.

alya-rajarani
alya-rajarani

 

- Advertisement -

Trending News