இமயமலையுடன் மோதும் தளபதி விஜய்.. யாரு சிதற போவது?

தளபதியின் மிகுந்த எதிர்பார்ப்பை கிளப்பி உள்ள பீஸ்ட் படத்தின் அப்டேட் எப்பொழுது வரும் என்று காத்துக் கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் ஏப்ரல் மாதத்தில் வெளிவரும் என்று அதிகாரப்பூர்வமாக தெரிவித்து சன் பிக்சர்ஸ். இதே மாதத்தில் பீஸ்ட் படத்துடன் 400 கோடி பட்ஜெட் படம் மோதுவதாக தற்போது ஒரு செய்தி வெளிவந்துள்ளது.

பிரம்மாண்ட இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில் கோடிக்கணக்கில் செலவு செய்து எடுக்கப்பட்டுள்ள திரைப்படம் ஆர்ஆர்ஆர். இந்த திரைப்படத்தில் ஜூனியர் என்டிஆர், ராம்சரண் உட்பட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

இப்படம் வரும் ஜனவரி 7ஆம் தேதி உலக அளவில் திரையரங்குகளில் வெளிவரும் என்று படக்குழு அறிவித்திருந்தது. இதற்காக இப்படத்தை ராஜமவுலி பல கோடி செலவு செய்து மும்பை, சென்னை உட்பட பல மாநிலங்களில் விளம்பரப்படுத்தி வந்தார்.

மேலும் ரசிகர்களும் இந்த படத்தை மிகவும் எதிர்பார்த்து வந்தனர். இந்நிலையில் ஆர்ஆர்ஆர் படத்தின் வெளியீடு தற்போது ஏப்ரல் மாதத்திற்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் சமீப காலமாக அதிகரித்து வருகிறது.

இதனால் பல மாநிலங்களும் ஊரடங்கு சட்டத்தை அமல்படுத்தி வருகிறது. விரைவில் தமிழ்நாடு, ஆந்திரா உட்பட பல இடங்களில் ஊரடங்கு வர இருக்கிறது. இதனால் மக்கள் அதிகம் கூடும் தியேட்டர் உள்ளிட்ட பல இடங்களும் மூடப்படும் நிலை உள்ளது.

இது தவிர பல தியேட்டர்களும் கொரோனா விதிமுறையை பின்பற்றாத காரணத்தினால் தொடர்ந்து சீல் வைக்கப்பட்டு வருகிறது. இவ்வளவு செலவு செய்து எடுத்த படத்தை தற்போது வெளியிட முடியாத நிலையில் ராஜமவுலி இருக்கிறார்.

இதனால் ஆர்ஆர்ஆர் திரைப்படம் ஏப்ரல் மாதத்தில் திரையரங்குகளுக்கு வர இருக்கிறது. அதே ஏப்ரல் மாதத்தில் தான் தளபதி விஜய்யின் நடிப்பில் பல எதிர்பார்ப்புகளுடன் உருவாகியிருக்கும் பீஸ்ட் திரைப்படமும் வெளிவர இருக்கிறது. தற்போது ராஜமவுலியின் இந்த பிரம்மாண்ட திரைப்படமும் அதே நாளில் வெளிவர இருப்பதால் இந்த இரண்டு படங்களுக்கு இடையே கடும் போட்டி ஏற்படும் நிலையும் உள்ளது.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படமாக இருந்த இந்த ஆர்ஆர்ஆர் திரைப்படத்தின் வெளியீடு தள்ளிப் போய் இருப்பது திரை பிரபலங்கள் உட்பட பலருக்கும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அனைத்து தரப்பு ரசிகர்களும் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்