fbpx
Connect with us

Cinemapettai

ராஜமௌலியின் RRR இந்த போராளிகளின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு தான் ரெடியாகிறது. உலகளவில் இந்தியாவின் பெருமையை கட்டாயம் நிலைநாட்டும் இப்படம்.

News | செய்திகள்

ராஜமௌலியின் RRR இந்த போராளிகளின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு தான் ரெடியாகிறது. உலகளவில் இந்தியாவின் பெருமையை கட்டாயம் நிலைநாட்டும் இப்படம்.

ராஜமௌலி. தற்போது, ராம் சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் இருவரும் நடிக்க, ’ஆர்.ஆர்.ஆர்’ (’RRR’) என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். டிவிவி தானய்யா தயாரிக்கும் இதன் பட்ஜெட் கிட்டத்தட்ட ரூ. 300 கோடிக்கு மேல் என சொல்லப்படுகிறது.

படத்தின் படப்பிடிப்பு தற்போது ஹைதராபாத் ராமோஜி பிலிமி சிட்டியில் நடந்து வருகிறது. இப்படத்தின் நாயகிகளாக இங்கிலாந்தை சேர்ந்த எட்கர் ஜோன்ஸ் மற்றும் பாலிவுட்டைச் சேர்ந்த அலியா பட் நடிக்கின்றனர். சமூத்திரக்கனி முக்கிய ரோலில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். பாலிவுட்டின் அஜய் தேவ்கனும் நடிக்கிறார். இப்படம் அடுத்த ஆண்டு ஜூலை 30 ஆம் தேதி வெளியாக இருப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வ தகவல் வெளியிட்டுள்ளது.

rajalmouli-rrr

rajalmouli-rrr

இந்நிலையில், இப்படத்தின் கதைக்களம் இந்திய சுதந்திரத்திற்கு முன்பு  நடப்பதாகும் . அல்லூரி சீதாராமராஜூ மற்றும் கொமாரம் பீம் என்கிற இரண்டு போராளி வீரர்களின் உண்மை கதையை மையமாக கொண்டே எடுக்கிறர்கள் படத்தை.

அல்லூரி சீதாராமராஜூ

1882 இல் Madras Forest Act அமல்படுத்தப்பட்டது. அந்த சமயத்தில் ராஜு பிற பழங்குடியின தலைவர்களையும் ஒன்று சேர்த்து, பிரிட்டிஷுக்கு எதிராக போராடினார். இவர் கதாபாத்திரத்தில் தான் ராம் சரண் நடிக்கிறார்.

Alluri_Sita_Rama_Raju_statue

கொமாரம் பீம்

பழங்குடியின மக்களுக்காக போராடியவர். நிஜாம் அரசுக்கு எதிராக மறைந்திருந்து தாக்கும் கொரில்லா முறைப்படி போராடியவர். ஏற்கனவே இவரின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு படம் மற்றும் டிவி சீரியல் வந்துள்ளது. ராஜமௌலியின் படத்தில் ஜூனியர் என் டி ஆர் இவர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

komaram-bheem

ஆக மொத்தத்தில் இப்படத்தில் பல சரித்திர நிகழ்வுகள், விவசாய மாற்றம், காட்டில் வாழும் மனிதர்கள் எவ்வாறு துன்புறுத்தப்பட்டனர். அவர்களின் உரிமை பறிக்கப்பட்டது ? என பல விஷயங்கள் இப்படத்தின் வாயிலாக உலகம் முழுவது கொண்டு செல்லும் ராஜமௌலியின் முயற்சிக்கு சினிமாபேட்டையின் சார்பில் வாழ்த்துக்கள்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top