Sathyaraj-Rajamouli

ராஜமௌலி இயக்கத்தில் பிரமாண்டமாக வெளியாக தயாராகி வருகிறது பாகுபலி 2. இந்த படத்தில் தமிழரான சத்யராஜ் நடித்துள்ளதால் அதை கர்நாடகாவில் வெளியிட அனுமதிக்கமாட்டோம் என சில கன்னட அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

மேலும் சத்யராஜ் 10 வருடத்திற்கு முன் காவிரி பிரச்சனை பற்றி பேசியதற்கு மன்னிப்பு கேட்டால் மட்டுமே அனுமதிப்போம் என கூறிவருகின்றனர்.

இந்நிலையில் இது பற்றி கருத்து தெரிவித்துள்ள இயக்குனர் ராஜமௌலி, “நான் சத்யராஜுடன் 5 வருடம் பணியாற்றிவிட்டேன், அவர் மற்றவர்களை புண்படுத்தும்படி பேசுபவர் என்று கற்பனையில் கூட என்னால் ஏற்றுகொள்ள முடியவில்லை. அவர் பேசியதாக கூறப்படும் வீடியோ சுமார் 10 வருடங்களுக்கு முன் வந்தது. அதற்கு பிறகு அவர் நடித்த 30 படங்கள் கர்நாடகாவில் வெளியாகியுள்ளது, ஏன் பாகுபலி படம் கூட வசூலில் சாதனை படைத்தது. அப்போதெல்லாம் எதுவும் பேசாமல், தற்போது வந்து போராட்டம் நடத்துவது சரியல்ல” என கன்னடர்களுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.