பிரபாஸ், அனுஷ்கா, ராணா, தமன்னா உள்ளிட்டோர் நடித்துள்ள பாகுபலி 2 படம் ஏப்ரல் மாதம் 28ம் தேதி ரிலீஸாக உள்ளது. நேற்று வெளியான ட்ரெய்லர் பல புதிய சாதனைகளை படைத்துள்ளது.

இந்நிலையில் படத்தின் இயக்குனர் ராஜமவுலி செய்தியாளர்களிடம் கூறுகையில்,

கட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றார் என்பதற்கான உண்மையான காரணத்தை மக்கள் யூகித்துவிடுவார்கள் என்று எனக்கு கவலை இல்லை. படத்தை எவ்வளவு விறுவிறுப்பாக அளிக்கிறோம் என்பது தான் முக்கியம்.

ராமாயணம், மகாபாரதம் பற்றி படம் எடுத்தால் அதன் கதை அனைவருக்கும் தெரியும். அதை நாம் எப்படி திரையில் அளிக்கிறோம் என்பது தான் முக்கியம்.

ட்ரெய்லர் வேலைகள் நடந்தபோது கவலையாக இருந்தது. ஆனால் கீரவானியின் பிஜிஎம்முடன் சேர்த்து ட்ரெய்லரை பார்த்ததும் மகிழ்ச்சியாக இருந்தது. நான் எதிர்பார்த்ததை விட அருமையாக வந்துள்ளது.

நான் அடுத்ததாக எந்த மாதிரி படம் பண்ணுவேன் என தெரியவில்லை. ஆனால் அதில் என் விஎப்எக்ஸ் சூப்பர்வைஸர் கமல கண்ணனுக்கு வேலை இருக்காது என்று நம்புகிறேன். விஎப்எக்ஸ் இல்லாத படம் பண்ணுவேன் என்றார் ராஜமவுலி.