பல நூறு கோடி பணத்தாசை காட்டிய ஓடிடி தளங்கள்.. தன் பாணியில் பதில் அளித்த ராஜமௌலி

பாகுபலி என்ற ஒற்றை படம் மூலம் உலகையே தென்னிந்திய சினிமா பக்கம் திரும்பி பார்க்க வைத்த இயக்குனர் தான் ராஜமெளலி. இப்படத்தை தொடர்ந்து இவரின் அடுத்தடுத்த படங்கள் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரிக்கத் தொடங்கியது. அந்த வரிசையில் தற்போது ராஜமெளலி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் தான் ஆர்ஆர்ஆர்.

ராம் சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர், அஜய்தேவ்கான், ஆலியா பட் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள இப்படம் கடந்த பொங்கல் அன்று நாடு முழுவதும் வெளியாக இருந்தது. ஆனால் கொரோனா பரவல் மற்றும் ஊரடங்கு காரணமாக படத்தின் வசூல் பாதிக்கப்படும் என்ற காரணத்தால் படக்குழுவினர் படத்தின் வெளியீட்டை தள்ளி வைத்தனர்.

இதனையடுத்து படம் ஏப்ரல் மாதம் வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இதற்கிடையில் படத்தின் வெளியீடு தள்ளி சென்ற சமயத்தில் ஆர்ஆர்ஆர் படத்தை நேரடியாக ஓடிடியில் வெளியிட பிரபல ஓடிடி நிறுவனம் ஒன்று இயக்குனர் ராஜமெளலியிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது.

மேலும் படத்திற்கு சுமார் 500 கோடி ரூபாய்க்கு மேல தருவதாகவும் அவர்கள் கூறியுள்ளனர். ஆனால் அவர்களின் ஆஃபரை மறுத்த ராஜமெளலி ஆர்ஆர்ஆர் படம் நிச்சயமாக தியேட்டரில் தான் வெளியாகும் என திட்டவட்டமாக கூறி விட்டாராம். ஏனெனில் பாகுபலி அளவிற்கு பிரம்மாண்டமாக உருவாக்கியுள்ள ஆர்ஆர்ஆர் படத்தை தியேட்டரில் பார்த்தால் தான் சிறப்பாக இருக்குமாம்.

மேலும் ஆர்ஆர்ஆர் படம் ஓடிடியில் வெளியாகும். ஆனால் படம் தியேட்டரில் வெளியாகி குறைந்தது 90 நாட்கள் கழித்தே ஓடிடியில் வெளியாகும் என கூறப்படுகிறது. அதன்படி ஆர்ஆர்ஆர் படத்தின் தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய மொழி டிஜிட்டல் உரிமையை ஜீ5 நிறுவனமும், ஹிந்தி, ஆங்கிலம், கொரியன், ஸ்பானிஷ், ஆகிய மொழிகளின் டிஜிட்டல் உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனமும் கைப்பற்றி உள்ளதாக கூறப்படுகிறது.

OTT தளத்தில் கொடுத்தால் நூற்றுக்கணக்கில் வேலை பார்த்தவர்கள் உழைப்பு வீணாகிவிடும் அதைத்தவிர ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றம் என்பதால் மட்டுமே இதுபோன்ற முடிவுகளை எடுத்திருப்பதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். அதைத் தவிர இது போன்ற பெரிய பட்ஜெட் படங்கள் OTT தளத்திற்கு சென்று விட்டால் கண்டிப்பாக தியேட்டருக்கு கும்பிடு போட்டு விடுவார்கள்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்