fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

350 கோடி பட்ஜெட்டில் உருவாகும் ராஜமௌலியின் பிரம்மாண்ட படம்.. கதாநாயகி யார் தெரியுமா?

rrr

Tamil Cinema News | சினிமா செய்திகள்

350 கோடி பட்ஜெட்டில் உருவாகும் ராஜமௌலியின் பிரம்மாண்ட படம்.. கதாநாயகி யார் தெரியுமா?

பிரமாண்ட இயக்குனர் ராஜமௌலி பாகுபலி 1 மற்றும் 2 ஆகிய மிகப்பெரிய வெற்றிப் படங்களை கொடுத்துவிட்டு தனது அடுத்த பட அறிவிப்பை அறிவித்தார். சுதந்திர போராட்ட வீரர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்படும் இந்த படத்தில் ராம் சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் ஆகிய இருவரும் இணைந்து நடிக்கின்றனர்.

தற்போதைக்கு ஆர்ஆர்ஆர் என பெயரிடப்பட்டுள்ள அந்த திரைப்படத்தில் ராம் சரணுக்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை ஆலியா பட் நடித்து வருகிறார். ஜூனியர் என்டிஆர்-க்கு ஜோடியாக இங்கிலாந்தைச் சேர்ந்த டெய்ஸி எட்கர் ஜோன்ஸ் என்பவர் ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

இந்நிலையில் தனிப்பட்ட பிரச்சினை காரணமாக ஜோன்ஸ் படத்திலிருந்து விலக, அடுத்ததாக யார் ஜோடி என்பதை அறிவிக்காமல் மௌனம் காத்தது படக்குழு. தற்போது ஜூனியர் என்டிஆர்- க்கு ஜோடியாக இங்கிலாந்து நாடக நடிகை ஓலிவா மோரிஸ் என்பவர் ஜெனிபர் என்ற கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக ராஜமவுலி அறிவித்தார்.

350 கோடி பட்ஜெட்டில் பிரமாண்டமாக உருவாகும் இந்த திரைப்படத்தை 2020 ஆம் ஆண்டு ஜூலை 30ஆம் தேதி வெளியிடப்படும் என்பதை படக்குழு திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top