கனமான கதாபாத்திரத்துடன் காத்திருக்கும் ராஜமௌலி.. வலையில் சிக்குவாரா அந்த தமிழ் நடிகர்

தெலுங்கில் பிரம்மாண்ட இயக்குனராக வலம் வரும் ராஜமௌலி தமிழ் சினிமா ரசிகர்களுக்கும் பிடித்த இயக்குநராக இருக்கிறார். இவர் இயக்கத்தில் வெளியான பாகுபலி, ஆர் ஆர் ஆர் போன்ற திரைப்படங்கள் தமிழ் ரசிகர்களை மிகவும் கவர்ந்தது.

அந்த வகையில் இவர் தமிழில் பிரபலமாக இருக்கும் நடிகர்களை தன்னுடைய திரைப்படத்தில் பயன்படுத்திக் கொள்கிறார். தற்போது இவர் ஆர் ஆர் ஆர் படத்தை தொடர்ந்து அடுத்த படத்திற்கான கதையை எழுதிக் கொண்டு இருக்கிறார். இந்த திரைப்படமும் பான் இந்தியா படமாக உருவாக இருக்கிறது.

இந்தப் படத்தில் பிரபல தெலுங்கு ஹீரோ மகேஷ்பாபு நடிக்க இருப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியான நிலையில் தற்போது அது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. மேலும் இந்த திரைப்படத்தில் ஒரு வலுவான கதாபாத்திரமும் இருக்கிறதாம்.

அதாவது பாகுபலி படத்தில் சத்யராஜின் கட்டப்பா கேரக்டர் எப்படி சிறப்பாக இருந்ததோ அதே போன்ற ஒரு கதாபாத்திரம் இதிலும் இருக்கிறது. ஆனால் அந்த கேரக்டரில் மீண்டும் சத்யராஜை நடிக்க வைத்தால் சரிவராது என்பதற்காக ராஜமௌலி ஒரு பெரிய ஹீரோவை அதில் நடிக்க வைக்க திட்டமிட்டுள்ளார்.

அவர் வேறு யாருமல்ல நம் உலகநாயகன் கமல்ஹாசன் தான். தற்போது விக்ரம் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ள அவர் அதற்கான பிரமோஷன் பணிகளில் பிஸியாக இருக்கிறார். அடுத்த மாதம் வெளியாக இருக்கும் இந்த படத்திற்காக ஒட்டுமொத்த திரையுலகமே ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில் ராஜமௌலி கமலுக்காக ஒரு கனமான கதாபாத்திரத்தை செதுக்கியுள்ளார். சொல்லப்போனால் அந்த கேரக்டரை கமலை தவிர வேறு யாராலும் செய்ய முடியாதாம். அதனால் ராஜமௌலி விரைவில் கமலை சந்தித்து இது குறித்து பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் தற்போது தயாரிப்புப் பணியிலும் கவனம் செலுத்தி வரும் கமல் அவரின் கனவு படமான மருதநாயகம் திரைப்படத்தையும் தொடங்குவதற்கு திட்டமிட்டுள்ளார். அதனால் ஆண்டவர் ராஜமௌலி திரைப்படத்தில் நடிக்க சம்மதிப்பாரா என்று பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

- Advertisement -spot_img

Trending News