ராஜமௌலி

தெலுங்கு சினிமாவின் முன்னனி இயக்குனர் என்பதில் இருந்து, இந்தியாவின் மோஸ்ட் வான்டேட் இயக்குனர் ஆக மாறுவதற்கு ஒரே காரணம் என்றால் அது பாகுபலி தான். முதல் பாகம் இந்திய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியது என்றால், இரண்டாம் பாகம் உலகளவில் ரீச் ஆகியுள்ளது.

bahubali_cinemapettai
bahubali_cinemapettai

தனது அடுத்த படம் டபுள் ஹீரோ சப்ஜெட் கதையை உருவாக்கி உள்ளார் இயக்குனர். இதில் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர் கதாநாயகன்களாக நடிக்க உள்ளனர். இது நாம் முன்பு அறிந்த விஷயமே. படத்தின் மொத்த பட்ஜெட் 150 கோடிக்கு மேல் தாண்டும் என்றும் கூறப்படுகிறது.

rajamouli
SS RAJAMOULI RAMCHARAN JR NTR

இந்த படம் பாக்ஸிங் சம்மந்தப்பட்ட கதை என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றது. மேலும் இந்த படத்தில் ஜூனியர் என்டிஆரும், ராம்சரணும் சகோதரர்களாக நடிக்க உள்ளனர் என்றும் கிசுகிசுக்கப்படுகின்றது. இப்படத்தின் வாயிலாக ஜூனியர் என்டிஆர் நான்காவது முறையாகவும், நடிகர் ராம் சரண் இரண்டாவது முறையாகவும் இயக்குனர் ராஜமௌலியுடன் இணைந்துள்ளனர்.

தற்பொழுது ப்ரீ ப்ரொடக்ஷன் பணிகள் நடைபெற்றுவருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் அக்டோபர் மாதம் துவங்குமாம். தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் மற்றும் தமிழ் என நான்கு மொழிகளில் ரிலீஸ் செய்யவார்களாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here