Connect with us
Cinemapettai

Cinemapettai

1000 கோடி பட்ஜெட்டில் பிரமாண்டமாக உருவாகும் ராஜமௌலியின் அடுத்த படம்.. என்ன கதை, யார் ஹீரோ தெரியுமா?

rajamouli

Tamil Cinema News | சினிமா செய்திகள்

1000 கோடி பட்ஜெட்டில் பிரமாண்டமாக உருவாகும் ராஜமௌலியின் அடுத்த படம்.. என்ன கதை, யார் ஹீரோ தெரியுமா?

இந்திய சினிமாவிலேயே மிகப்பெரிய இயக்குனராக வலம் வருபவர் ராஜமவுலி(Rajamouli). பாகுபலி, பாகுபலி2 படங்களின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு உலகமே அறியப்படும் இயக்குனர்களில் ஒருவராக மாறிவிட்டார்.

தற்போது தெலுங்கு சூப்பர் ஸ்டார் நடிகர்களான ராமச்சரன் மற்றும் ஜூனியர் என்டிஆர் ஆகிய இருவரையும் மையப்படுத்தி RRR என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் பட்ஜெட் சுமார் 400 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் இப்படத்தின் டைட்டில் டீசர் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அதுமட்டுமில்லாமல் ராமச்சரன் பிறந்தநாளன்று அவரது கதாபாத்திரத்தின் வீடியோவும் வெளியானது. ஜூனியர் என்டிஆர் பிறந்த நாளில் அந்த வீடியோவை வெளியிட முடியாமல் வருத்தம் தெரிவித்தது படக்குழு.

இந்நிலையில் ராஜமவுலியின் அடுத்த படம் சுமார் ஆயிரம் கோடி பட்ஜெட்டில் உருவாக இருக்கிறது. அந்த படத்தில் ஹீரோவாக பாலிவுட் சூப்பர் ஸ்டார் நடிகர் அமீர்கான் நடிக்க உள்ளார்.

மகாபாரதம் கதையை மையமாகக் கொண்டு உருவாகும் இந்த படத்திற்கு கதை வசனம் எழுதுகிறார் ராஜமவுலியின் தந்தை விஜயேந்திர பிரசாத். தமிழில் மெர்சல் படத்திற்கு கதை எழுதியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த ஊரடங்கு காலத்தில் மகாபாரதத்தின் படத்தின் கதை பணி ஆரம்ப கட்டத்தில் இருப்பதாகவும், அமீர்கானுடன் தொடர்புகொண்டு இதற்கான கதை விவாதத்தில் ஈடுபட்டு கொண்டிருப்பதாகவும் விஜயேந்திர பிரசாத் சமீபத்தில் தெரிவித்துள்ளார்.

விரைவில் இந்த படத்துக்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவரும் என தெரிகிறது. அப்படி மட்டும் ராஜமவுலி மகாபாரதம் படத்தை இயக்கி விட்டால் இந்தியாவில் நம்பர் ஒன் இயக்குனராக மாறிவிடுவார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top