Connect with us
Cinemapettai

Cinemapettai

valimai-rrr

Tamil Cinema News | சினிமா செய்திகள்

வலிமை வினோத் செய்ததை திரும்ப செய்த ராஜமௌலி.. ‘ஆர்ஆர்ஆர்’ சொதப்பிய 2 முக்கிய தவறுகள்

பிரம்மாண்ட இயக்குனர் ராஜமௌலியின் இயக்கத்தில் உருவான ஆர்ஆர்ஆர் திரைப்படம் இன்று வெளியாகி அனைத்து இடங்களிலும் களைகட்டி வருகிறது. பான் இந்தியா படமாக உருவாகியிருக்கும் இந்த படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட அனைத்து மொழிகளிலும் வெளியாகி இருக்கிறது.

பிரபல தெலுங்கு நடிகர்களை தவிர மற்ற மொழியில் முன்னணியில் இருக்கும் பல நடிகர், நடிகைகளும் இப்படத்தில் இணைந்துள்ளதால் பிரம்மாண்டத்திற்கு பஞ்சமில்லாமல் இருக்கிறது. இதுவே படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி இருக்கிறது.

இதனால் இன்று படம் வெளியான முதலே பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் படக்குழுவினருக்கு தங்கள் பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர். படம் நேர்மறையான பல விமர்சனங்களை பெற்றிருந்தாலும் அதே அளவுக்கு எதிர்மறையான விமர்சனங்களையும் பெற்று வருகிறது.

அது என்னவென்றால் இப்படம் வலிமை திரைப்படத்தைப் போலவே நீளம் அதிகமாக இருக்கிறது என்ற ஒரு கருத்து நிலவுகிறது. வலிமை திரைப்படம் வெளியான போது இதைத்தான் ஒரு குறையாக பலரும் தெரிவித்து வந்தனர். இதனால் சில நிமிட காட்சிகளும் நீக்கப்பட்டது.

தற்போது அந்தத் திரைப்படத்தைப் போலவே ராஜமௌலியின் படமும் கிட்டத்தட்ட 3 மணி நேரம் 2 நிமிடங்கள் ஓடும்படி இருக்கிறது. இது படத்தின் விறுவிறுப்பை சற்று குறைக்கவும் செய்துள்ளது. அதுமட்டுமல்லாமல் படத்தில் ஜூனியர் என்டிஆர் மற்றும் ராம்சரண் இருவருமே அதிகபட்ச இடங்களை ஆக்கிரமித்து உள்ளதாகவும் சிலர் கூறுகின்றனர்.

ஏனென்றால் படத்தில் ஆலியா பட், அஜய் தேவ்கன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இருக்கின்றனர். ஆனால் இவர்களுக்கு படத்தில் வாய்ப்பு சிறிது கம்மியாக இருப்பதாகவும் அதனால் அவர்கள் படத்தில் அந்த அளவுக்கு பிரகாசிக்கவில்லை என்ற ஒரு குற்றச்சாட்டும் இருக்கிறது.

அதுமட்டுமின்றி படம் சில இடங்களில் நம்முடைய எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்தும் அதற்கு அடுத்த காட்சியிலேயே சிறு சலிப்பையும் தருவதாகவும் இருக்கிறது. அதுமட்டுமின்றி படத்தின் நீளமும் பார்ப்பவர்களுக்கு எரிச்சலூட்டும் வகையில் இருக்கிறதாம்.

Continue Reading
To Top