புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

பொன்னியின் செல்வன் கதையை காப்பி அடித்த ராஜமௌலி.. இந்த நாலு ஆதாரம் போதும்

மணிரத்னம் மிகுந்த போராட்டத்திற்குப் பிறகு தனது கனவு படமான பொன்னியின் செல்வன் படத்தை எடுத்து முடித்துள்ளார். இப்படம் வருகின்ற செப்டம்பர் 30ஆம் தேதி 5 மொழிகளில் வெளியாகயுள்ளது. இதனால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து இருந்தது.

அண்மையில் பொன்னியின் செல்வன் படத்தின் டீஸர் வெளியாகி ரசிகர்களின் கவனம் பெற்ற நிலையில் பலரும் பாகுபலி சாயலில் இருப்பதாக விமர்சித்து வந்தனர். ஆனால் உண்மையில் பொன்னியின் செல்வன் நாவலை அடிப்படையாகக் கொண்டுதான் ராஜமௌலி பாகுபலி படத்தை எடுத்துள்ளார்.

அதாவது பொன்னியின் செல்வன் நாவல் சோழ மன்னர்களின் பெருமையை சாற்றும் வகையில் அமைந்துள்ளது. அதில் இடம்பெற்றுள்ள பல காட்சிகள் பாகுபலி திரைப்படத்தில் அப்படியே உள்ளது. இதை ரசிகர்கள் கண்டுபிடித்து பொன்னியின் செல்வன் நாவலில் உள்ள புகைப்படத்துடன் பாகுபலி படத்தில் இடம் பெற்ற சில காட்சிகளையும் ஒப்பிட்டுப் பதிவிட்டுள்ளனர்.

அதில் முதலாவதாக வானில் போகும் கப்பல் ஏற்கனவே பொன்னியின் செல்வன் நாவலில் இடம் பெற்றிருந்தது. மேலும் சிவகாமி தேவி பாகுபலியை ஆற்றில் தூக்கிப் பிடித்திருக்கும் காட்சி பொன்னியின் செல்வன் நாவலில் அருள்மொழி வர்மனை இதேபோல் ஆற்றில் காப்பாற்றுவார்கள்.

அதைப்போல் பாகுபலி படத்தில் மறைந்திருந்து வில் விடுவதில் பாகுபலி சிறந்தவராக இருப்பார். இதே காட்சி பொன்னியின் செல்வன் நாவலும் இடம்பெற்றிருந்தது. மேலும் பாகுபலிக்கு யானை கட்டுப்பட்டு இருக்கும். அதேபோல் பொன்னியின் செல்வன் நாவலில் அருள்மொழிவர்மன் கட்டுப்பாட்டில் யானை இருக்கும்.

இவ்வாறு பொன்னியின் செல்வன் நாவலில் இருந்து ஒவ்வொரு காட்சியையும் ராஜமவுலி பாகுபலி படத்தில் வைத்துள்ளார். ஏனென்றால் யாரும் இந்த நாவலை படமாக்க மாட்டார்கள் எண்ணி ராஜமௌலி பொன்னியின் செல்வன் நாவலை காப்பியடித்த நிலையில் தற்போது மணிரத்னம் இப்படத்தை எடுத்ததால் எல்லாம் வெட்ட வெளிச்சமாகியுள்ளது.

Ponniyin Selvan-Baahubali
- Advertisement -

Trending News