Tamil Cinema News | சினிமா செய்திகள்
100 கோடிக்கு ஆசைப்பட்டு கொரானாவில் மாட்டிய ராஜமௌலி.. இதை பண்ணாம இருந்திருக்கலாம்!
இந்திய சினிமாவில் மிகப்பெரிய இயக்குனராக கருதப்படுபவர் ராஜமவுலி. பாகுபலி படங்களின் மூலம் மிகப்பெரிய உயரத்தை தொட்டு வசூல் இயக்குனராக மாறியுள்ளார். சம்பளம் நூறு கோடி.
தற்போது ஜூனியர் என்டிஆர் மட்டும் ராம்சரன் ஆகிய தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களை இணைத்து RRR எனும் படத்தை இயக்கி வருகிறார். சுமார் 400 கோடி பட்ஜெட்டில் இந்த படம் உருவாகி கொண்டிருக்கிறது.
சில மாதங்களாக படப்பிடிப்புகள் தடை செய்யப்பட்டிருந்த நிலையில் சமீபத்தில் தான் ஆந்திர அரசால் படப்பிடிப்புகள் நடத்திக் கொள்ளலாம் என அனுமதி அளிக்கப்பட்டதை தொடர்ந்து ராஜமௌலி தன்னுடைய படத்துக்கான டெஸ்ட் சூட்டில் பங்கேற்றார்.
அப்போது தான் இவருக்கு கொரானா தொற்றி உள்ளது தெரியவந்துள்ளது. என்னதான் பெரிய ஆட்களாக இருந்தாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என்றால் பாதிப்புகளில் மாட்டிக் கொள்வார்கள் என்பது தெளிவாக தெரிந்துள்ளது.
தற்போது ராஜமௌலிக்கு மட்டுமல்லாமல் அவரது மொத்த குடும்பத்திற்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாம். இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் அவரே தெரிவித்துள்ளார்.
மேலும் தங்களது குடும்பத்தினரும் தானும் தங்களைத் தாங்களே தனிமைப்படுத்திக் கொள்ள இருப்பதாகவும், விரைவில் இதிலிருந்து மீண்டு வர ரசிகர்கள் கடவுளை வேண்டிக் கொள்ளுமாறு கேட்டுள்ளார்.
ஒருவேளை அந்த டெஸ்ட் சூட்டில் பங்கேற்காமல் இருந்திருந்தால் கொரோனாவில் இருந்து தப்பித்து இருப்பாரோ என்னவோ.
